All for Joomla All for Webmasters
 • கிளிநொச்சியில் நிகழ்த்தப்படும் அட்டூழியம்: இரவு நேரங்களில் கடன் வசூலிக்கும் நிதி நிறுவனம்..!
 • pool-games-10பூங்காக்களை தொடர்ந்து வெளிக்கள நீச்சல் தடாகங்களும்... கனேடிய தேசிய தினத்தை முன்னிட்டு எட்மண்டனில் விசேட முயற்சி..!
 • wodaerரொரன்ரோவை மீண்டும் அச்சுறுத்தும் இயற்கை அனார்த்தம்: மீண்டும் வெள்ள எச்சரிக்கை..!
 • vikkiவடக்கு முதல்வரின் கனேடிய விஜயத்துக்காக திரட்டப்பட்ட நிதி விவகாரம்: உண்மைக்கு புறம்பான செய்திகளுக்கு கனடிய தமிழர் சமூக அமையம் விளக்கம்..!
 • Kathleen Wynne;சரிந்தது மக்கள் மத்தியிலான செல்வாக்கு.. முதல்வர் கத்தலின் வின் பற்றிய திடுக்கிடும் முடிவு வெளியானது..!
 • RBCசுமார் 450 குடும்பங்களின் சாபத்திற்கு இரையாக போகும் கனடா றோயல் வங்கி..!
 • canadaian weap“கனடா டே”... ராணுவத்திற்கு நிகராக மாறும் பொலீசார்: ஒட்டாவா காவல்துறையின் வியக்கதகு செயல்..!
 • Canadian-Cancer-Societyபதைபதைக்கும் செய்தியை வெளியிட்ட கனேடிய புற்றுநோய் அமைப்பு: 80,800 கனேடியர்கள் உயிரிழக்கலாம்..?
 • nasaதமிழனின் செயற்கைகோளை இன்று விண்ணில் ஏவியது நாசா..!
 • lkr_sri_lanka_rupee_currency1முதன்முறையாக பாரிய வீழ்ச்சி: சரிந்த இலங்கை ரூபாயின் பெறுமதி..!
 • ARTICLE

  அடுத்த நூறு ஆண்டுகளில் அழிந்துவிடும் வாய்ப்புள்ள 25 மொழிகளில் தமிழ் எட்டாவது இடத்தில்…!

  tamil_(1)

  மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 1966-இல் நடைபெற்ற முதலாவது உலகத் தமிழ் மாநாடும்,

  சென்னையில் 1968-இல் நடந்த இரண்டாவது உலகத் தமிழ் மாநாடும், தமிழையும் தமிழினத்தையும் உலகமே வியந்து பார்க்க வைத்தன.

  கோவையில் 2010-இல் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு ஆய்வுகளிலும்,

  உலகளாவிய தமிழ் அறிஞர்கள் கூடித் தமிழ் மொழியின் வளர்ச்சி குறித்து விவாதிப்பதிலும் தொய்வு ஏற்பட்டிருக்கிறது.

  உலகத் தமிழ் மாநாட்டை விரைவிலேயே நடத்துவதற்கான முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிகிறது.

  தாய்த் தமிழகத்திலேயே தமிழ் மிகப்பெரிய பின்னடைவை எதிர்கொள்ளும் நிலையில், அயலகத் தமிழர்கள் தங்கள் தாய் மொழியையும், தமிழின் பண்பாட்டுக் கூறுகளையும் பாதுகாப்பதும், அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வதும் எந்த அளவு கடினம் என்பதை நாம் உணர வேண்டும்.

  பல நாடுகளில், தமிழ் வம்சாவளியினர் தமிழை எழுதவும், பேசவும் முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

  அங்கெல்லாம், தமிழ் கற்றுக் கொடுப்பதற்கான முயற்சியில் சில அமைப்புகள் ஈடுபட்டிருக்கின்றன.

  அவர்களுக்கு முறையான வழிகாட்டுதலும், ஆதரவும் தாய்த் தமிழகத்திலிருந்து தரப்படவில்லை என்பது மிகப்பெரிய குறை.

  பிரிட்டிஷ் கவுன்சில், அலையன்ஸ் பிரான்சைஸ், இந்தி பிரசார் சபா போன்று மொழியைப் பரப்பவும், கற்றுக் கொடுக்கவும், ஏனைய மொழிகளில் அமைப்புகள் இருப்பதுபோல, தமிழுக்கு அமைப்பு எதுவும் இல்லை.

  தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் சில முயற்சிகளை மேற்கொள்கின்றன.

  தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் இதற்கான முயற்சியில் ஈடுபடாமல் இல்லை.

  ஆனாலும்கூட, உலகளாவிய அளவில் உள்ள தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைக்கவும், அந்த நாடுகளில் எல்லாம் தமிழ் கற்றுக் கொடுக்கவும் நாம் எந்தவொரு முறையான அமைப்பையும் இன்னும் ஏற்படுத்தாமல் இருக்கிறோம்.

  உலக அளவில் அடுத்த நூறு ஆண்டுகளில் அழிந்துவிடும் வாய்ப்புள்ள 25 மொழிகளில் தமிழ் எட்டாவது இடத்தில் இருப்பதாக யுனெஸ்கோ அமைப்பு எச்சரித்திருக்கும் நிலையில், நாம் முனைப்புடன் விரைந்து செயல்பட்டாக வேண்டும்.

  தமிழக அரசு இதை உணர்ந்திருக்கிறது என்பதைத்தான் அறிவிப்புகள் உணர்த்துகின்றன.

  Leave a Comment