All for Joomla All for Webmasters
  • கிளிநொச்சியில் நிகழ்த்தப்படும் அட்டூழியம்: இரவு நேரங்களில் கடன் வசூலிக்கும் நிதி நிறுவனம்..!
  • pool-games-10பூங்காக்களை தொடர்ந்து வெளிக்கள நீச்சல் தடாகங்களும்... கனேடிய தேசிய தினத்தை முன்னிட்டு எட்மண்டனில் விசேட முயற்சி..!
  • wodaerரொரன்ரோவை மீண்டும் அச்சுறுத்தும் இயற்கை அனார்த்தம்: மீண்டும் வெள்ள எச்சரிக்கை..!
  • vikkiவடக்கு முதல்வரின் கனேடிய விஜயத்துக்காக திரட்டப்பட்ட நிதி விவகாரம்: உண்மைக்கு புறம்பான செய்திகளுக்கு கனடிய தமிழர் சமூக அமையம் விளக்கம்..!
  • Kathleen Wynne;சரிந்தது மக்கள் மத்தியிலான செல்வாக்கு.. முதல்வர் கத்தலின் வின் பற்றிய திடுக்கிடும் முடிவு வெளியானது..!
  • RBCசுமார் 450 குடும்பங்களின் சாபத்திற்கு இரையாக போகும் கனடா றோயல் வங்கி..!
  • canadaian weap“கனடா டே”... ராணுவத்திற்கு நிகராக மாறும் பொலீசார்: ஒட்டாவா காவல்துறையின் வியக்கதகு செயல்..!
  • Canadian-Cancer-Societyபதைபதைக்கும் செய்தியை வெளியிட்ட கனேடிய புற்றுநோய் அமைப்பு: 80,800 கனேடியர்கள் உயிரிழக்கலாம்..?
  • nasaதமிழனின் செயற்கைகோளை இன்று விண்ணில் ஏவியது நாசா..!
  • lkr_sri_lanka_rupee_currency1முதன்முறையாக பாரிய வீழ்ச்சி: சரிந்த இலங்கை ரூபாயின் பெறுமதி..!
  • CINEMA

    பலரின் குடும்பங்களை கண்காணிக்கும் கழுகு பார்வை கமல்: இறுதியில் நிகழப்போவது..?

    kamal

    சமீபத்தில் எங்கும், எல்லோராலும் பேசப்படும் ஒரு விஷயம் பிக்பாஸ். மக்கள் மனதில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளதற்கு முக்கிய காரணம், இதை தொகுத்து வழங்க இருப்பது கமல்ஹாசன் என்பது கூடுதல் சிறப்பு. பிக்பாஸ் புரோமோவை வெளியிட்டு பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

    அவர் பேசும்போது, நான் கம்பெனி ஆரம்பித்த போது கூட பாஸ் வேஷம் போட்டது இல்லை. சினிமாவில் இதுவரை வில்லனாக, குள்ளனாக, நாயகனாக, போலீஸாக, அமெரிக்கனாக, இந்தியனாக நடித்திருக்கிறேன்.

    நிஜத்தில் இந்தியனாக வாழ்ந்து வருகிறேன். இந்த நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு தமிழக குடும்பத்துக்குள்ளும் சென்றடைய ஒரு நல்ல வாய்ப்பாக இதை எடுத்துக் கொள்கிறேன்.

    நாலரை வயதிலிருந்து இந்த தொழிலில் இருக்கிறேன். என்னுடைய எந்த முதல் வேலையாக இருந்தாலும் அதை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொள்வது வழக்கம்.

    என்ன தான் புதுமை பேசினாலும் பழமை கொஞ்சம் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. அதனால் தான் விஜய் டிவியில் வருவதற்கு முன்னர் கூட பத்திரிகையாளர்கள் பார்க்க வேண்டும் என்று விரும்பி உங்களை சந்தித்தேன்.

    அமிதாப் பச்சன் நிறைய நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியை சல்மான் கான் வித்தியாசமாக செய்திருந்தார்.

    அது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. 14 பிரபலங்கள் ஒரே வீட்டில் 100 நாட்கள் எந்த வெளியுலக தொடர்பும் இல்லாமல் தங்குவார்கள். அவர்களை 30 கேமராக்கள் பதிவு செய்யும். அவற்றை நான் அவ்வப்போது கண்காணிப்பேன்.

    அமீர்கான் செய்த சத்யமேவ ஜயதே போல, அவரை விடவும் அதிகமாக நான் கடந்த பல வருடமாக செய்து வருகிறேன்.

    இதை நான் பெருமையாக சொல்லிக் கொள்வேன். இந்நிகழ்ச்சியின் அடிநாதம் சொல்ல வருவது ஒத்துழைப்பு தான். 21-ம் நூற்றாண்டில் ஒத்துழைப்பு தான் மிக முக்கியம். இப்போது யுத்தத்தில் கூட எதிரிகளை மொத்தமாக அழித்துவிட முடியாது. அவர்கள் இருந்து கொண்டே தான் இருப்பார்கள்.

    ஜூன் 25ஆம் தேதி முதல் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. வார இறுதி நாட்களில் கமல் கலந்து கொள்ளுமாறு எபிசோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

    விழாவில் விஜய் டிவியின் பொது மேலாளர் கிருஷ்ணன் கலந்து கொண்டார். திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கினார்.

    Leave a Comment