All for Joomla All for Webmasters
  • முகத்தில் மகிழ்ச்சி ஒரு பக்கம், சோகம் மறுபக்கம்: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் நிலை..??
  • yaanatheepamஈழத்தால் ஈட்டிய வெகுமதி: ஆசிய நோபல் பரிசு இலங்கை தமிழ் சமூக சேவகருக்கு உரித்தானது..!
  • paksitanpmபாகிஸ்தான் பிரதமர் பதவி பறிப்பு: கிரிமினல் வழக்குத் தொடரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு..!!
  • sppincanadaவிழாக்கோலம் பூண்ட டொறன்ரோ: பாடும் நிலா எஸ்.பி.பி..,யின் இனிய கானங்கள் இரண்டு நாட்கள்- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்..!!
  • abdulkalammemoriyalகலாம் உடல் இங்கே உறங்கி கொண்டிருக்க, அக்டோபர் 15ல் அடுத்த மாற்றம்..??
  • seconddaymatchஇந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் இலங்கை...
  • yaalnethipathiதந்தையின் ஸ்தானத்தில் நீதிபதி இளஞ்செழியன்: மெய்ப்பாதுகாவலரின் இரு பிள்ளைகள் தத்தெடுப்பு..!!
  • presidentawardகிளிநொச்சி விவசாயிக்கு ஜனாதிபதி விருது: வறட்சி காலநிலையிலும் காணி பசுமையாக...!!
  • escapeநீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட திருட்டுச் சம்பவ கைதி திடீர் ஓட்டம்: யாழில் பரபரப்பு..!!
  • rhsகடல் கடந்தும் கரம் நீட்டும் உறவுகள்: 'கல்விக்கான ஓட்டம்' இலங்கை மாணவர்கள் வாழ்வை கரைசேர்க்கும் ஓர் உன்னதம்..!!
  • SRI LANKA

    இலங்கை என்ன இவர் சொத்தா..? இலங்கை கடற்பகுதிக்குள் நுழைய தமிழக மீனவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை- ராஜபக்சே மகன்..!

    NAMAKRAJA

    இலங்கை கடற்பகுதியில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்க எந்த உரிமையும் கிடையாது என்று இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே கூறியுள்ளார்.

    எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவர்களை சிறை பிடிப்பதும், துப்பாக்கியால் சுடுவதும், அவர்களுக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதித்து வருகிறது இலங்கை அரசு.

    இதனால், தமிழக மீனவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். இலங்கை அரசால் அண்மையில் அறிவிக்கப்பட்ட சிறை தண்டனை மற்றும் அபராதத் தொகை குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியது.

    இந்த நிலையில், இலங்கை அரசின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே, தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டக் கூடாது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இலங்கை கடற்பகுதியில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று கூறியுள்ளார். தமிழக மீனவர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் மீன் பிடிக்க வேண்டும் என்றும் நமல் ராஜபக்சே எச்சரிக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.

    Leave a Comment