All for Joomla All for Webmasters
 • முகத்தில் மகிழ்ச்சி ஒரு பக்கம், சோகம் மறுபக்கம்: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் நிலை..??
 • yaanatheepamஈழத்தால் ஈட்டிய வெகுமதி: ஆசிய நோபல் பரிசு இலங்கை தமிழ் சமூக சேவகருக்கு உரித்தானது..!
 • paksitanpmபாகிஸ்தான் பிரதமர் பதவி பறிப்பு: கிரிமினல் வழக்குத் தொடரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு..!!
 • sppincanadaவிழாக்கோலம் பூண்ட டொறன்ரோ: பாடும் நிலா எஸ்.பி.பி..,யின் இனிய கானங்கள் இரண்டு நாட்கள்- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்..!!
 • abdulkalammemoriyalகலாம் உடல் இங்கே உறங்கி கொண்டிருக்க, அக்டோபர் 15ல் அடுத்த மாற்றம்..??
 • seconddaymatchஇந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் இலங்கை...
 • yaalnethipathiதந்தையின் ஸ்தானத்தில் நீதிபதி இளஞ்செழியன்: மெய்ப்பாதுகாவலரின் இரு பிள்ளைகள் தத்தெடுப்பு..!!
 • presidentawardகிளிநொச்சி விவசாயிக்கு ஜனாதிபதி விருது: வறட்சி காலநிலையிலும் காணி பசுமையாக...!!
 • escapeநீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட திருட்டுச் சம்பவ கைதி திடீர் ஓட்டம்: யாழில் பரபரப்பு..!!
 • rhsகடல் கடந்தும் கரம் நீட்டும் உறவுகள்: 'கல்விக்கான ஓட்டம்' இலங்கை மாணவர்கள் வாழ்வை கரைசேர்க்கும் ஓர் உன்னதம்..!!
 • ARTICLE

  தரணியை வென்றது தமிழ்மொழியே… இந்தி மொழியின் தாயகம் இந்தியா அல்ல..!

  tamilmoli

  சமீபத்தில் நடத்தப் பெற்ற மொழி ஆய்வின் படி, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளின் தாயகம் துருக்கி என அறியப்பட்டுள்ளது.

  ஆங்கிலம் மற்றும் இந்தி பேசுபவர்கள் ஏறக்குறைய 4000 ஆண்டுகளுக்கு முன்பு கருங்கடல் பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பது தற்போது மொழி ஆராய்ச்சியாளர்கள் நம்பும் கருத்து ஆகும்.

  அவர்கள், கருங்கடல் பகுதியில் உள்ள தங்கள் தாய் நாட்டில் இருந்து ஆசியா மற்றும் ஐரோப்பாவை வெற்றி கொண்டு, குடியேறி வந்தவர்கள் எனவும்,

  அவர்களால் மேற்கூறிய மொழிகள் பரவியது என்றும் அறியப்பட்டு வருகிறது.

  கருங்கடலில் இருந்து வந்தவர்கள் தேர் ஒட்டுதல் மற்றும் மேய்த்தல் தொழில் செய்தவர்கள், போர் வீரர்கள் என ஒரு கருத்து நிலவுகிறது.

  ஆனால், தற்போது இதற்கு முரணான கோட்பாடு ஒன்று ஆராய்ச்சியில் அறியப்பட்டுள்ளது. அதாவது, 9000 ஆண்டுகளுக்கு முன்பே ‘அனடோலியா’ என்ற பகுதியில் (தற்போதைய துருக்கி) இருந்து இடம்பயர்ந்து வந்தவர்களாலேயே இந்திய-ஐரோப்பிய மொழிகள் உருவாயின என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

  இந்த மொழிகளைப் பேசுபவர்கள் சாதாரண விவசாயிகள். மேலும், அவர்கள் அமைதியான முறையில் இடம்பெயர்ந்து வந்தவர்களே என்பதும்,

  தற்போதுள்ள துருக்கியை போரினால் யாரும் கைப்பற்றவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

  ஆங்கிலம், டச்சு, ஸ்பெயின், கிரேக்கம், ரஷியன் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகள் ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத மாதிரி தோன்றினாலும்,

  இந்த மொழிகளின் ஒலி பிறப்பிடம் மற்றும் சொல்லியல் ஆகியவைகளை ஆராயும்போது, மேற்கூறிய ஆறு மொழிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

  இந்த மொழிகளில் உள்ள பல சொற்கள், ஒரே வேர்ச்சொல்லில் இருந்து வந்தவை என்பது, ஆராய்ச்சியாளர்களின் கருத்தான, ‘ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளின் தாயகம் துருக்கி’ என்பதற்கு வலு சேர்க்கிறது.

  மேலும், தமிழுடன் ஒப்பிடும்போது, ஹிந்தியில் வேர்ச்சொற்கள் மிகக்குறைவு தான். ஹிந்தி மொழி முழுக்க, முழுக்க இந்தோ-ஐரோப்பிய மொழிகள் மற்றும், இந்தோ-ஆரிய மொழியான சமஸ்க்ரிதத்தில் இருந்து கடன் வாங்கி உருவாகியிருக்கும்.

  இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும்.

  திராவிட மொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் மேலும் கவனமாகப் பழைய அமைப்புகளைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது.

  எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது.

  திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது. ஆனால், தமிழ் மொழி அறிந்தவர்களுக்கு இப்போதும் இவை எளிதாக புரியும்.

  இந்த கண்டுபிடிப்புகள் மொழி வரலாற்றையே மறு பார்வை செய்யத் தூண்ட வைப்பதாக ஆராய்ச்சி செய்த மொழியியல் அறிஞர் அட்கின்சன் தெரிவித்துள்ளார்.

  Leave a Comment