பேருந்தின் இறங்கும் பகுதியிலிருந்து விலகி நிற்குமாறு கேட்டதற்காக சிவில் உடையில் வந்த படைச்சிப்பாய், வீதியில் நின்ற படையினரையும் துணைக்கு அழைத்து பேருந்தின் நடத்துனர், சாரதி மீது காட்டுமிராண்டித்தனமாக நடத்திய தாக்குதலில் நடத்துனரும், சாரதியும் காயமடைந்துள்ளனர். 

நேற்று வெள்ளியன்று இரவு 8.30மணியளவில் பரந்தன் சந்திப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது. குறித்த பேருந்து கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்துள்ளது.

இந்நிலையில் பரந்தன் சந்திக்கு முன்பாக பேருந்தை மறிந்த சிப்பாயொருவர் அதிலேறியுள்ளார், இந்நிலையில் பரந்தன் சந்தியில் போக்குவரத்துப் பொலிஸார் நிற்பதை அவதானித்த பேருந்தின் நடத்தனர்,

இறங்கும் வழியில் நிற்பவர்கள் மேலே ஏறி வருமாறு கேட்டுள்ளார். இதற்கு மறுத்த படைச்சிப்பாய், மேலே ஏறிவர மறுத்ததுடன் ஒரு கட்டத்தில் நடத்துனர் மற்றும் பயணி ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதனையடுத்து பரந்தன் சந்தியில் பேருந்து நிறுத்தப்பட்டபோது அப்பகுதியிலிருந்த படையினரை அழைத்த குறித்த படைச்சிப்பாய் சிங்கள மொழியில் ஏதோ பேசியுள்ளார். இதனையடுத்து அங்கு கூடிய படையினர் நடத்துனர் மீதும் பயணி மீதும், சாரதி மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை பொலிஸாரும் பார்த்துக் கொண்டு நின்றுள்ளனர். எனினும் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்காத நிiயில் படையினர் தாக்குதல் நடத்திவிட்டு சென்ற பின்னரே அங்கு மேலதிக பொலிஸாரை வரவழைத்து படைச்சிப்பாயையும், சாரதி மற்றும் நடத்துனரையும் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.

இதேவேளை பரந்தன் சந்தியில் பயணிகள் மற்றும் பேருந்து நடத்துனர் சாரதி மீது மேற்கொள்ளப்பட்ட 3வது தாக்குதல் சம்பவம் இதுவென தெரிவிக்கப்படுகின்றது.

இப்பகுதி படையினர் இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை தொடர்ந்து நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ka.

 

Related News
0  Comments :
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள் :
Unicode Tamil     Tamil Typewritter     Tamil 99      English

பெயர் : Rate this :
   உதவி
கருத்து:


* Security Code : 90278

Enter the Above Security Code Here   


குறிப்பு:  பிரசுரிப்புக்களுக்கு  வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை செய்யப்படுவதில்லை. அக்கருத்துக்களுக்கு வாசகர்களே பொறுப்பு. அவதூரான கருத்துக்களை அடையாளம் காட்டினால் அவை நீக்கப்படும். கருத்துக்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதற்கும் வாசகரே பொறூப்பாவார்.அன்பான வாசகர்களே! அர்த்தமுள்ள கருத்துக்களைப் பதிவு செய்திடுங்கள்.
1000 characters left