இலங்கை விவகாரத்தில் மற்றயை நாடுகள் அனைத்திற்கும் முன்மாதிரியாக நடந்த கனடியப் பிரதமருக்கும், வெளிவிவகார அமைச்சருக்கும் கனடியத் தமிழர்கள் சார்பிலான நன்றியறிதல் நிகழ்ச்சியை  கனடியத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் உமாசுதன் தலைமையில் நடந்தது.

 

மேற்படி விழாவில் கலந்து கொண்ட கண்சவேட்டிவ் பாராளுமன்ற உறுப்பினர்களின் மூலமாகவும் இச் செய்தி நேரடியாகவே கனடியத் தமிழ்க் காங்கிரஸால் தெரிவிக்கப்பட்டதோடு இவ் உறவைப் பலப்படுத்துமுகமான அமைச்சரவை சகாக்களுடனான சந்திப்புக்கான அழைப்பை தமிழ்க்காங்கிரஸ் கடித மூலம் விடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.

 

கனடியப் பிரதமரின் தலைமைத்துவப் பண்பை வெளிப்படுத்திய சிறீலங்கா மீதான கண்டன நடவடிக்கையைச் சுட்டிக் காட்டியே கனடியத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் இந்த நன்றியறிதலைத் தெரிவித்திருந்ததோடு தாங்கள் கனடியர்கள், தமிழர்கள் சம்பந்தமான விவகாரங்களில் தொடர்ந்தும் அரசியற் கட்சிகளுடனும் தலைவர்களுடன் சேர்ந்து இயங்கும் என்றும் தெரிவித்தார்.

 

அத்தோடு கனடியத் தமிழர்களிற்குத் தேவையான கலாச்சார – சமூக மண்டபமொன்றை அமைப்பதையே 2012ம் ஆண்டிற்கான திட்டமாக எடுத்துள்ளதாகவும், ஈழத் தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளிற்கு நியாயங் கிடைப்பதற்கு தொடர்ந்தும் பாடுபடும் என்றும் தெரிவித்தார்.

 

as

Related News
0  Comments :
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள் :
Unicode Tamil     Tamil Typewritter     Tamil 99      English

பெயர் : Rate this :
   உதவி
கருத்து:


* Security Code : 37141

Enter the Above Security Code Here   


குறிப்பு:  பிரசுரிப்புக்களுக்கு  வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை செய்யப்படுவதில்லை. அக்கருத்துக்களுக்கு வாசகர்களே பொறுப்பு. அவதூரான கருத்துக்களை அடையாளம் காட்டினால் அவை நீக்கப்படும். கருத்துக்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதற்கும் வாசகரே பொறூப்பாவார்.அன்பான வாசகர்களே! அர்த்தமுள்ள கருத்துக்களைப் பதிவு செய்திடுங்கள்.
1000 characters left