|
Jan
29
உண்மைகளைக் கண்டறியும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பல்வேறு நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாதகமான சாட்சியங்கள் இருப்பின் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படுமென சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவிக்கின்றது.
உண்மைகளைக் கண்டறியும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஜனாதிபதி செயலகம் கடந்த வாரம் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைத்திருந்தது.
ஆணைக்குழு அறிக்கையில் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திருமதி ஈவா வனசுந்தர தெவித்துள்ளார். விசாரணையின் போது அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர் அல்லது நிறுவனங்களுக்கு எதிராக போதுமான ஆவணங்கள், சாட்சியங்கள் இருந்தால் அவர்களுக்கு எதிராக வழக்கு தொட ரடியும் என அவர் தெவித்துள்ளார். சட்டமா அதிபர் திணைக்களம் சனல் 4 வீடியோ தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொள்ளும். சட்டமா அதிபர் திணைக்கள பிரதி செயலாளர் நாயகம் ஒருவரின் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவொன்றே இந்த அறிக்கையை ஆராயும் நடவடிக்கைகளை இப்போது ஆரம்பித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ka.
0 Comments :
|
|||||

