
மியான்மர் நாட்டின் ஜனநாயக தலைவர் ஆங் சான் சூயிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
திபெத் புத்த மத தலைவர் தலாய் லாமாவுக்கு ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் சமீபத்தில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. மியான்மர் நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆங்சான் சூயி பல ஆண்டுகளாக போராடி வருகிறார். 15 ஆண்டுக்கு மேல் அவர் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டார். சமீபத்தில்தான் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
அவரது போராட்டத்தின் பலனாக மியான்மரில் விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பிரசாரத்தில் சூயி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அத்துடன் மியான்மரில் ஜனநாயகம் மலரவும், மனித உரிமை களை காப்பாற்றவும் அவர் நடத்திய போராட்டத்தை பாராட்டி அவருக்கு 1991ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஜாமியா மிலியா பல்கலைக்கழக துணை வேந்தர் நஜீப் ஜங் கூறுகையில், ஜாமியா பல்கலை சார்பில் பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், திபெத் புத்த மத தலைவர் தலாய் லாமா ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வரிகையில், மியான்மரில் ஜனநாயகம் மலர போராடிய ஆங் சான் சூயியை பாரா ட்டி கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற மக்களுக்காக போராடுபவர்களை பாராட்டி டாக்டர் பட்டம் வழங்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது என்றார்.
as
Related News