இந்திய அணி வெளிநாட்டு மைதானங்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. நேற்று நடைபெற்ற அவுஸ்திரேலியாவிற்கு எதிரான 20-20 போட்டியிலும் தோல்வியை சந்தித்தது.

இதுகுறித்து இந்திய அணித்தலைவர் டோனி கூறியதாவது: இப்போது என்னை கேட்டால், நாங்கள் முதலில் துடுப்பெடுத்து ஆடி இருக்க வேண்டும் என்று தான் சொல்வேன்.

ஆடுகளம் 2-வதாக துடுப்பெடுத்தாட மிகவும் கடினமாக இருந்தது. அதே சமயம் மழையால் இங்கிலாந்தில் எவ்வளவு கஷ்டப்பட்டு விளையாடினோம் என்பதையும் மறந்து விடக்கூடாது. அங்கு ஒரு நாள் தொடரில், நாம் எந்த ஒரு ஆட்டத்திலும் நாணய சுழற்சியில் வெற்றி பெறவில்லை.

அதே சமயம் ஒவ்வொரு முறையும் மழை குறுக்கிட்டதால் 2-வது இன்னிங்சில் நமது பந்துவீச்சாளர்கள் பந்து வீச மிகவும் சிரமப்பட்டனர், அதனால் தோல்வியும் ஏற்பட்டது.

மழையால் எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்பதை அங்கு கற்றுக்கொண்டோம். சிட்னியிலும் அதே போன்ற வானிலை தான் காணப்பட்டது. இதனால் தான் இங்கு நாணயசுழற்சியில் வென்றதும் சேசிங் செய்து விடலாம் என்று நினைத்து, முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தேன்.

ஆனால் நான் நினைத்தது மாதிரி நடக்கவில்லை. மழையின் தாக்கத்தால் நமது சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து வீச சிரமப்பட்டனர். ஈரப்பதம் காரணமாக, பந்தை பிடித்து சரியான இலக்கில் வீசுவதற்கு கிரீப் கிடைக்கவில்லை.

ஆனால் இந்திய அணி விளையாடும் போது நிலைமை மாறி விட்டது. அப்போது மழை ஏதும் பெய்யவில்லை. இதனால் ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக பந்து நன்கு சுழல ஆரம்பித்தது.

அவர்களால் பந்தை நன்றாக பிடித்து வீச முடிந்தது. பழைய பந்து வழக்கத்தை விட அதிகமாக எகிறவும் செய்தது. இதனால் ஓட்டங்கள் எங்களுக்கு கடினமாகி விட்டது.

மொத்தத்தில் வானிலை ஆட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது. இருப்பினும் ஓரளவு நல்ல தொடக்கம்(5.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 47 ஓட்டங்கள்) கிடைத்தது. ஆனால் அதனை பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டோம். முதல் தர துடுப்பாட்ட வீரர்களில் யாராவது ஒருவர் நீண்ட நேரம் நிலைத்திருந்தால் ஆட்டத்தின் போக்கை மாற்றியிருக்கலாம்.

அவுஸ்திரேலிய அணியில் மேத்யூ வாட்டினின் துடுப்பாட்டம் உண்மையிலேயே அருமையாக இருந்தது. அவருக்கு டேவிட் ஹஸ்ஸி, வார்னர் உறுதுணையாக இருந்தனர்.

விளையாட்டில் நல்ல விளையாடுகிற அணி வெற்றி பெறும். அந்த வகையில் நல்ல ஆடிய அணி வெற்றி பெற்றிருக்கிறது. நமது தோல்வியை மறக்க முயற்சிக்கிறோம். நாளை நல்லதே நடக்கும் என்ற நம்புகிறேன். மெல்போர்னில் சிறப்பாக செயல்படுவோம் என்றார்.

ka.

 

Related News
0  Comments :
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள் :
Unicode Tamil     Tamil Typewritter     Tamil 99      English

பெயர் : Rate this :
   உதவி
கருத்து:


* Security Code : 79000

Enter the Above Security Code Here   


குறிப்பு:  பிரசுரிப்புக்களுக்கு  வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை செய்யப்படுவதில்லை. அக்கருத்துக்களுக்கு வாசகர்களே பொறுப்பு. அவதூரான கருத்துக்களை அடையாளம் காட்டினால் அவை நீக்கப்படும். கருத்துக்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதற்கும் வாசகரே பொறூப்பாவார்.அன்பான வாசகர்களே! அர்த்தமுள்ள கருத்துக்களைப் பதிவு செய்திடுங்கள்.
1000 characters left