சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்காக அமெரிக்க உட்பட பல மேற்குலக நாடுகள் தொடர்ந்தும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன.

இவ்வாறானதொரு மோசமான நிலை ஏற்படாமல் தடுப்பதற்கு இலங்கையர் அனைவரும் அனைத்துப் பேதங்களையும் மறந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இதன் மூலமே இந்தச் சூழ்ச்சியை முறியடிக்க முடியும் இவ்வாறு தெரிவிக்கிறார் சிறிலங்கா அமைச்சரான விமல் வீரவன்சமாத்தளைப் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு அவர் மேலும் கூறியதாவது,

மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் இலங்கைகக்கு எதிரான பல முன்மொழிவுகள் முன்வைக்கப்படவுள்ளன. இந்த விடயத்தில் ஐக்கிய அமெரிக்க ராஜ்யம் தற்போது முன்னின்று செயற்படுகிறது. சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள்> படுகொலைகள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுக்கவுள்ளது. இதற்காக அந்த நாடு மேற்குல நாடுகளினதும் ஏனைய நாடுகளினதும் ஆதரவை சிறிலங்காவுக்கு எதிராகத் தற்போது திரட்டி வருகிறது.

இந்த நாட்டில் இப்போது 13 பிளஸோ வேறு எதுவுமோ தேவை இல்லை. இங்கு தேவைப்படுவது எல்லாம் அபிவிருத்தி பிளஸ் மட்டுமே. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ka.

 

Related News
0  Comments :
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள் :
Unicode Tamil     Tamil Typewritter     Tamil 99      English

பெயர் : Rate this :
   உதவி
கருத்து:


* Security Code : 54251

Enter the Above Security Code Here   


குறிப்பு:  பிரசுரிப்புக்களுக்கு  வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை செய்யப்படுவதில்லை. அக்கருத்துக்களுக்கு வாசகர்களே பொறுப்பு. அவதூரான கருத்துக்களை அடையாளம் காட்டினால் அவை நீக்கப்படும். கருத்துக்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதற்கும் வாசகரே பொறூப்பாவார்.அன்பான வாசகர்களே! அர்த்தமுள்ள கருத்துக்களைப் பதிவு செய்திடுங்கள்.
1000 characters left