The News Sponsor By
feature-top
feature-top

சீரற்ற வானிலை காரணமாக அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் 2 இலட்சத்து 53 ஆயரம் பேர் பாதிக்க்படப்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிககை 16 ஆக அதிகரித்துள்ளது.

அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்த பலத்த மழை காரணமாக பிரம்மபுத்ரா மற்றும் அதன் கிளை நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.   வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அசாம் மாநிலத்தின் 6 மாவட்டங்களில் 142 நிவாரண முகாம்கள் மற்றும் விநியோக மையங்கள் அமைக்கப்பட்டு 18 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், அம்மாநிலத்தின் பல மாவட்டங்களில் சாலைகள், பாலங்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளதாக அசாம் மாநில பேரிடர் நிர்வாக ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Share This News
feature-top
feature-top