The News Sponsor By
feature-top
feature-top

நகரில் வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவதை தடுக்க, ஜூலை 6 முதல், நகரத்தில் 50 தானியங்கி வேக அமலாக்க (ASE) கேமராக்கள் செயல்பாட்டுக்கு வரும் என்று ரொறன்ரோ மேயர் ஜான் டோரி தெரிவித்துள்ளார்.


இது குறித்து மேலும் பேசிய அவர்,


நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை மீறி பயணிக்கும் ஓட்டுநர்களுக்கு தானியங்கி முறையில் டிக்கெட் செய்யத் தொடங்கும். எங்கள் #VisionZero கருவிப்பெட்டியில் உள்ள பல கருவிகளில், ASE ஒன்றாகும். இது நகரத்தில் வேகத்தை குறைத்து உயிரைக் காப்பாற்றும் நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டது.


இந்த ASE கருவி வேக கட்டுப்பாட்டை அதிகரிக்கிறது, ஓட்டுநர் நடத்தையை மாற்றுகிறது மற்றும் வேக வரம்புகளை மட்டுப்படுத்தும். எங்கள் ASE கருவி அதிக வேகத்தைத் தடுக்கும், பாதிக்கப்படக்கூடிய சாலை பயனர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.


இது எங்கள் சாலைகளை பாதுகாப்பானதாக்கும். இந்த கேமராக்கள் தேவையில்லாத ஒரு நகரத்தில் நான் வசிக்கவிரும்புகிறேன். ஆனால் மக்கள் வேகமாக பயணிப்பதை நாங்கள் அறிவோம்.  இந்த கேமராக்கள் அவற்றைப் பிடித்து அபராதம் விதிப்பதை உறுதி செய்யும்" என்று தெரிவித்துள்ளார்.

Share This News
feature-top
feature-top