The News Sponsor By
feature-top
feature-top

வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் பணம் மற்றும் கடன் ஆகியன எங்களிடம் வருவதில்லை என அருந்தவபாலன் தெரிவித்துள்ளார். 

கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த மக்கள் சந்திப்பு இன்று பிற்பகல் கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் இடம்பெற்றது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்காக பெருந்தொகையான நிதிகளை சர்வதேச நாடுகள் கொடுத்தது. வடக்கு மாகாணத்திற்கு வந்த பணத்தை எல்லைக் கிராமங்களிற்கு அவர்கள் கொடுத்துவிட்டார்கள். 

நாங்கள் எமது மக்களிற்கு உதவிகளை செய்யவேண்டும். எமது மக்களிற்கு வாழ்வாதாரத்தை அதிகரிக்க வேண்டும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு புனர்வாழ்வு, புனருத்தானம் அமைக்கப்பட வேண்டும்.

நாங்கள் இந்த நாட்டில் உரிமைகளுடன் வாழ வேண்டும் உரிமைகளுடன் வாழ்வதற்கு நாங்கள் தனி நாடு கேட்கவில்லை. அரசாங்கத்துடன் ஆயுதம் எடுத்து சண்டை போடவில்லை.  

எங்கள் உரிமைகளிற்காக ஜனநாயக ரீதியில் போராட்டங்களை முன்னெடுப்பதுடன், பாராளுமன்றத்தின் ஊடாக சர்வதேசத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். தன்னாச்சி அதிகாரம் கொண்ட சமஸ்டி அடிப்படையிலான உரிமைகளுடன் வாழ விரும்புகின்றோம்.

3000 வருடங்களிற்கு முன்பிருந்தே வாழும் மூத்த குடிகள் நாங்கள். எங்களுடைய வடக்கு கிழக்கு பகுதியில் மரபு ரீதியில் வாழ்கின்ற பகுதிகளாக நாங்கள் கொண்டுள்ளோம். 

வடக்கு கிழக்கு பகுதியில் ஓர் சுயாட்சி அமைப்பிளை நாங்கள் கேட்கின்றோம். எங்கள் காணிகள், வழங்களை எங்களிற்காக பயன்படுத்துவதையே நாங்கள் கேட்சிக்றோம். 

உரிமைக்காக குரல் கொடுப்பாேமேயன்றி வெறுமனே கோசம் போட்டுக்கொண்டு நிற்பவர்கள் நாங்கள் அல்ல எனவும் அவர் தெரிவித்தார். 

Share This News
feature-top
feature-top