The News Sponsor By
feature-top
feature-top

நாதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, டொராண்டோ அடையாள சின்னத்தில் காணப்பட்ட கருப்பின எதிர்ப்பு மற்றும் சுதேசிய இனவெறிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்களை அகற்றப்போவதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.


"நாங்கள் காழ்ப்புணர்ச்சியை மதிப்பிட்டுள்ளோம், அதை விரைவில் அகற்றி வருகிறோம்" என்று மின்னஞ்சலில் நகர நிர்வாகம்  தெரிவித்துள்ளது.


ஞாயிற்றுக்கிழமை, ரொறொன்ரோ பொலிஸ் சேவைக்கான வரவுசெலவுத் திட்டத்தில் 50 சதவிகிதம் குறைக்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் சதுக்கத்தில் கூடியிருந்தனர். மினியாபோலிஸ், மினில் ஜார்ஜ் ஃபிலாய்ட் இறந்ததைத் தொடர்ந்து நடந்த பல கட்ட போராட்டங்களில், இந்த ஆர்ப்பாட்டமும் ஒன்றாகும். அதேபோல் டொராண்டோவில் ரெஜிஸ் கோர்ச்சின்ஸ்கி-பாக்கெட் மற்றும் பிராம்ப்டனில் எஜாஸ் அகமது சவுத்ரி இறந்தார். 


No Pride in Policing Coalition (NPPC) ஏற்பாடு செய்த இந்த போராட்டம் கறுப்பின எதிர்ப்பு மற்றும் சுதேசிய இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், காவல்துறையினர் அத்துமீறலை தடுக்க வேண்டும் என்ற நோக்கிலும் முன்னெடுக்கப்பட்டது. 



Share This News
feature-top
feature-top