The News Sponsor By
feature-top
feature-top

இந்தியாவிற்கு ஆதரவு அளிக்கும் முகாமாக  விமானங்களின் மூலம்  சுமார் 300 டன் இற்கும்  அதிகளவான ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது.

இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்சினை காரணமாக ஏற்பட்டுள்ள  போர் சுழலை கருத்திற்கொண்டு அமெரிக்க, இந்தியாவிற்கு  போர்  ஆயுதங்கள் வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கமைவாக  மேற்கு ஜெர்மனியில் உள்ள அமெரிக்க விமானப் படை தளத்தில் இருந்து விமானங்களினூடாக  ஆயுதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக  அமெரிக்க வெளியுறவுத் துறை உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது

இதேவேளை அவசர தேவையின் அடிப்படையில் மாத்திரமே இந்தியாவிற்கு  ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்  மேலும் இந்தியாவின் தேவைக்கு ஏற்ப தொடர்ந்து ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்படும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Share This News
feature-top
feature-top