The News Sponsor By
feature-top
feature-top

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் பிரதேச செயலகத்தினால் மின்னிணைப்புக்கள் விநியோகம் : தேர்தல் பரப்புரைக்கா சாந்தி சிறிஸ்காந்தராஜா பயன்படுத்துவது தொடர்பில் மக்கள் விசனம்.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் பிரதேச செயலகத்தினால் மின்னிணைப்புக்கள் விநியோகம் இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் தேர்தல் பரப்புரைக்காக சாந்தி சிறிஸ்காந்தராஜா பயன்படுத்துவது தொடர்பில் மக்கள் கவலை வெளியிடுகின்றனர். 

மாங்குளம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் பிரதேச செயலகத்தினால் இவ்வாறு பொது மக்களிற்கான மின் இணைப்புக்கள் வழங்கப்படடு வருகின்றது. 

இவ்வாறான நிலையில் குறித்த மின் இணைப்புக்கள் தொடர்பில் தேர்தல் பிரச்சாரத்திற்காக அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராஜா பயன்படுத்தி வருகின்றமை தொடர்பில் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளரிடம் வினவியபோது, குறித்த மின் இணைப்புக்களிற்கான கடந்த ஆண்டு திட்டத்திற்கான நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம் 5ம் மாதமளவில் கிடைத்தது. 

ஆனால் அதற்கான நிதி மாவட்ட செயலகத்திற்கு கிடைக்காமையால் திட்டம் நடைமுறைப்படுத்த முடியாது போனதாகவும், அதற்கான நிதி திரைசேரியினால் தற்போது விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

எனினும் தற்போது பொதுத் தேர்தலிற்கான பிரச்சாரங்கள் இடம்பெற்று வரும் நிலையில் இவ்வாறு அரச திணைக்களங்களினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் திட்டங்களிற்கு அரசியல்வாதிகள் உரிமை கோருவது தொடர்பில் மக்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. குறித்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துபவர்களால் மின் இணைப்பிற்கான நிதி சாந்தி சிறிஸ்காந்தராசாவின் ஒதுக்கீட்டில் கிடைத்தது தொடர்பில் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருவதாகவும், ஓர் தேர்தல் இடம்பெறுகின்ற சந்தர்ப்பத்தில் இவ்வாறு மக்கள் பிரதிநிதியாக இருந்த ஒருவரின் நிதி ஒதுக்கீட்டில் கிடைத்த அபிவிருத்திகளை முன்னெடுப்பதனால் கட்சி சார்பான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாக கருத முடியும் என புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

மாங்குளம் பகுதிகளில் இடம்பெற்ற மக்கள் சந்திப்புக்களில் முன்னாள் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராசா மற்றும் அவரது ஆதரவாளர்களால் மேற்குறித்த மின் இணைப்புக்களை தேர்தல் பிரச்சாராமாக முன்னெடுத்து வருகின்றமை தொடர்பில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளரிடம் வினவியபோது, அவ்விடயம் தொடர்பில் தேர்தல்கள் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்ய முடியும் என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தேர்தல் பிரச்சார பணிகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டுவரும் சந்தர்ப்பத்றில் ஒரு கட்சியின் வேட்பாளரை ஆதரிக்கும் வகையில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல்கள் திணைக்களம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என புத்திஜீவிகள் கருத்து வெளியிடுகின்றனர்.


Share This News
feature-top
feature-top