The News Sponsor By
feature-top
feature-top

கொரோனா காரணமாக கர்நாடகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி மூலம் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

இந்நிலையில் கடக் மாவட்டம் ரத்திர் நகநூர் என்ற கிராமத்தைச்சேர்ந்த கூலித் தொழிலாளியும் அவரின் மனைவி கஸ்தூரியும் குழந்தைகள் கல்விக்காக உதவ நினைத்தனர். ஆனால் வீட்டில் டிவி இல்லாததால் கஸ்தூரியின் குழந்தைகள் அக்கம் பக்கத்து வீடுகளுக்கு சென்று படித்து சிரமப்பட்டு வந்தனர்.

இதனால் வருத்தமடைந்த கஸ்தூரி தனது தாலியை அடகு வைத்து 14 ஆயிரம் ரூபாய் பணத்தில் புதிய டிவி வாங்கியுள்ளார். இந்த தகவல் அமைச்சர் பாட்டில் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இந்நிலையில் தாலியை அடகுக்கடையில் இருந்து மீட்ட அதிகாரிகள் மீண்டும் கஸ்தூரியிடமே கொடுத்தனர்.

Share This News
feature-top
feature-top