The News Sponsor By
feature-top
feature-top

Scarboroughவில் கடந்த திங்கள்கிழமை நிகழ்ந்த பாலியல் தாக்குதல் குறித்த குற்றச்சாட்டில் 19 வயதான ஷாருஹன் ஸ்ரீகரன் என்பவர் கைதாகியுள்ளார்.

திங்கள், ஜூலை 27, 2020, 9:30 மணிக்கு,  John Tabor Trail மற்றும் Wishford Drive பகுதியில் 30 வயது பெண் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னப்பின் தெரியாத ஆண் பின்னால் வந்து, அவரை பாலியல் ரீதியாக தாக்கியுள்ளார். இது குறித்து காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வியாழக்கிழமை அன்று டொரோண்டோவைச் சேர்ந்த ஷாருஜான் ஸ்ரீஹரன் கைது செய்யப்பட்டார். அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

அவர் வெள்ளிக்கிழமை, (ஜூலை 31) காலை 10 மணிக்கு கிழக்கு, 1911 எக்லிண்டன் அவென்யூவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

 

Share This News
feature-top
feature-top