The News Sponsor By
feature-top
feature-top

சவுதி அரேபியாவில் இருந்து, நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு, விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்குள்ளான கர்ப்பவதியான தாயார் நேற்று குழந்தையை பிரசவித்துள்ளார்.

அந்தக் குழந்தை சுகதேகியாக இருப்பதாக, யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்தனர். சவுதி அரேபியாவில் பணிப்பெண்ணாக பணியாற்றிய இந்தப் பெண் திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

கோவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக, சவுதி அரேபியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு, யாழ்ப்பாணம் விடத்தல்பளை கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வேளையில், நேற்று முன்தினம்  குழந்தைப் பேற்றுக்கான வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மகப்பேறு இடம்பெற்றுள்ளது.

மகப்பேற்றின் பின்னர், குழந்தையும் தாயும் நலமாக இருப்பதாகவும், வைத்தியர்கள் தெரிவித்ததுள்ளனர்.
 

Share This News
feature-top
feature-top