The News Sponsor By
feature-top
feature-top

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14ஆயிரத்தை கடந்தது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் வைரஸ் தொற்றினால் 14ஆயிரத்து 58பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுதவிர உலகளவில் கொவிட்-19 தொற்றினால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த நான்காவது நாடான ரஷ்யாவில், மொத்தமாக எட்டு இலட்சத்து 45ஆயிரத்து 443பேர் பாதிப்படைந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஐந்தாயிரத்து 462பேர் பாதிப்படைந்ததோடு, 95பேர் உயிரிழந்துள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒரு இலட்சத்து 84ஆயிரத்து 861பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களில் ஆறு இலட்சத்து 46ஆயிரத்து 524பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் 2,300பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

Share This News
feature-top
feature-top