The News Sponsor By
feature-top
feature-top

டெல்லியில் கொரோனா தொற்று பரவுவதால் அங்குள்ள பரிசோதனை கூடங்கள் பரபரப்பாக இயங்கி வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதனை மையத்தில் இளைஞர் ஒருவர் டெக்னீசியனாக உள்ளார்.

இவருக்கு அதிகளவில் பெண்கள் நட்பு வட்டாரம் உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி வரும் ஒரு பெண்ணிடம் வேலை வாங்கித்தருவதாக கூறி பேசி வந்துள்ளார்.

இந்நிலையில் அப்பெண் கடந்த 9ஆம் தேதி வழக்கம்போல் அவரை பார்க்க சென்றுள்ளார். அப்போது அவரை டெக்னீசியன் தான் வேலை பார்க்கும் ஆய்வுக்கூடத்துக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

அங்குவைத்து ஆசை வார்த்தை கூறி அப்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவர் எதிர்த்ததால் கொலை மிரட்டல் விடுத்து அந்தப்பெண்ணை மருத்துவமனையின் ஆய்வுகூடத்திலேயே வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

வீட்டில் இருந்த பெண் தனக்கு நடந்த கொடூரத்தை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். அதிர்ச்சி அடைந்த போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் டெக்னீசியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This News
feature-top
feature-top