The News Sponsor By
feature-top
feature-top

நெல்லையில் அணிவகுப்பில் பங்கேற்ற பெண் காவல் ஆய்வாளரின் கடமை உணர்ச்சி அணைவரையும் நெகிழச்செய்துள்ளது.

நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் சுதந்திர தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அணிவகுப்பு மரியாதையை ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையேற்று நடத்தினார்.

காவல் ஆய்வாளர் மகேஸ்வரியின் தந்தை நாராயணசுவாமி நேற்று இரவு உயிரிழந்தார். இந்த தகவல் உடனடியாக அவருக்க நேற்றிரவே தெரிவிக்கப்பட்டது.

தந்தையின் ஊரான திண்டுக்கல் மாவட்டம் வடமதுரைக்கு உடனே புறப்படவேண்டிய சூழல் ஏற்பட்டது. எனினும் அணிவகுப்பு மரியாதையை தலைமையேற்று நடத்த வேண்டியிருந்ததால் கடனை உணர்ச்சி, தேசியப்பற்று அவரை தடுத்தது.

அதன்படி இன்று காலை 8 மணிக்கு நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் அணிவகுப்பு மரியாதையை நடத்தினார்.

அணி வகுப்பை முடித்த மகேஸ்வரி உடனடியாக தனது தந்தை துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காகச் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றார்.

மனதிற்குள் அவ்வளவு துயரம் இருந்தபோதும், அணிவகுப்பு நிகழ்ச்சியை எந்தவித குறைவும் இன்றி மகேஸ்வரி நடத்தி முடித்தார். அணிவகுப்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு தான் இந்த துயர செய்தி பலருக்கும் தெரிய வந்தது.

பெண் காவல் ஆய்வாளரின் இந்த செயல் தமிழக மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share This News
feature-top
feature-top