The News Sponsor By
feature-top
feature-top

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவில் இப்போதே முதலமைச்சர் வேட்பாளர் குறித்து சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

மூத்த அமைச்சர்கள் ஆலோசனை, போஸ்டர் கிழிப்பு போன்ற சம்பவங்களுக்கு பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், மீண்டும் ஒரு தொடர் வெற்றியை பெற அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரமிது. இனிவரும் காலங்களிலும் சிறப்புற ஆட்சி நடத்தி மீண்டும் ஒரு தொடர் வெற்றியை பெற்றிடுவோம்.

கட்சி நிர்வாகிகள் கடந்த சில நாட்களாக கூறிய கருத்துக்கள் விவாதப் பொருளாகிவிட்டன. அதிமுக தலைமையின் ஒப்புதலின்றி தனிப்பட்ட கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும்.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஜெயலலிதா காலத்தில் இருந்ததைப் போன்று ராணுவ கட்டுப்பாட்டுடன் தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்.

தொண்டர்களின் மன உணர்வை எதிரொலிக்கும் வகையில் கட்சி தலைமை உரிய நேரத்தில் சிறப்பான முடிவுகளை எடுக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share This News
feature-top
feature-top