The News Sponsor By
feature-top
feature-top

கனடாவை வந்டைந்த MV Sun Sea கப்பலின் உரிமையாளர் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், அவர் முதன்முறையாக பகிரங்கமாகப் பேசியுள்ளார்.

குணராபின்சன் கிறிஸ்துராஜா, விக்டோரியா தம்பதியரின் 2010 ஆண்டு கப்பல் பயணம் கொடுமையாக இருந்தது. பயங்கர மக்கள் நெருக்கடி, பாதுகாப்பு உபகரணங்களோ கழிவறைகளோ இல்லாமல் 380 ஆண்கள், 63 பெண்கள் மற்றும் 49 குழந்தைகள் பயணித்த அந்த கப்பலில் ஒருவர் வழியிலேயே இறந்துபோனார்.

பெண்களில் நால்வர் கர்ப்பிணிகள், கிறிஸ்துராஜாவின் மனைவி உட்பட. கனடாவுக்கு செல்கிறோம் என்ற கனவுடன் வந்திறங்கியபோது அவர்களின் மகிழ்ச்சி காணாமல் போனது.

கரையிறங்கிய அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு அனைவரும் காவலிலடைக்கப்பட்டனர். கப்பலில் மனிதக் கடத்தல்காரர்களும் தீவிரவாதிகளும் வந்திறங்கியிருக்கிறார்கள் என தகவல் பரவ, கனடா முழுக்க பயம் தொற்றிக்கொண்டது.

கிறீஸ்துராஜா மீது கப்பலின் உரிமையாளரே அவர்தான், பணத்தை வாங்கிக்கொண்டு அவர்தான் மக்களை கனடா அழைத்துவந்தார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

தற்போது ஒரு பிளம்பராக பணிபுரியும் கிறிஸ்துராஜாவின் அகதி கோரிக்கை இன்னமும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, ஆனால் அவரது மனைவி விக்டோரியாவின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.

MV Sun Sea என்னும் அந்த கப்பல் கனடா வந்து பத்து ஆண்டுகள் நிறைவுற்றதை நினைவுகூறும் நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்துகொண்டுள்ளார் கிறிஸ்துராஜா.

நாங்கள் இந்த நாட்டை அழிக்க வந்த தீவிரவாதிகள் அல்ல, ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்காக நாங்கள் இங்கு வந்தோம் என்னும் செய்தியை கனடாவுக்கு தெரிவிப்பதற்காகத்தான் அந்த நிகழ்ச்சியில் தானும் தனது குடும்பமும் கலந்துகொண்டுள்ளதாக உருக்கமாக பேசியுள்ளார்.

Share This News
feature-top
feature-top