The News Sponsor By
feature-top
feature-top

டி.வி.சீரியல் நடிகை ஸ்ராவனியை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது இரு முன்னாள் காதலர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கதாநாயகி வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி அத்துமீறிய சினிமாத் தயாரிப்பாளரை ஐதராபாத் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

ஐதராபாத்தில் டிவி சீரியல் நடிகை ஸ்ராவனி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், டிக்டாக் பிரபலம் தேவராஜ் ரெட்டி என்பவன் அவரை ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்ததாக ஸ்ராவனியின் பெற்றோர் புகார் அளித்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த விசாரணையில், நடிகை ஸ்ராவனியின் தற்கொலைக்கு அவரது 3 முன்னாள் காதலர்களின் தொல்லை முக்கிய காரணமாக இருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

2015 ஆம் ஆண்டு சாய் ரெட்டியோடு ஸ்ராவனிக்கு காதல் மலர்ந்துள்ளது. மகளைத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறிய நடிகையின் பெற்றோரை மகிழ்விக்க சாய் ரெட்டி லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு டிக்டாக் பிரபலமான தேவராஜ் ரெட்டி என்கிற சன்னியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சன்னியின் நடிப்புத்திறமையை கண்டு மயங்கிய ஸ்ராவனி அவனுடன் தனிமையில் இருந்த போது, அதனை வீடியோவாக எடுத்து வைத்திருந்துள்ளான் சன்னி.

அவ்வப்போது பணம் பெறுவதை வழக்கமாக்கி இருந்த சன்னி, ஒரு கட்டத்தில் வீடியோவை காட்டி மிரட்டி பணம் பறிக்கத் தொடங்கியதால் கடும் தொல்லைக்கு ஆளாகியுள்ளார் ஸ்ராவனி.

இந்த நிலையில் தான், கடந்த ஆண்டு சினிமா தயாரிப்பாளரான அசோக்குமார் ரெட்டியை சந்தித்துள்ளார் ஸ்ராவனி. அவரை கதாநாயகியாக ஆக்கப் போவதாகவும், காதலிப்பதாகவும் ஆசைவார்த்தை கூறிய அசோக்குமார், பின்னர் கைவிட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

பொய்யான வாக்குறுதிகளை நம்பி காதலர்களை மாற்றினாலும், 3 பேர் மீதும் நடிகை ஸ்ராவனி முழு நம்பிக்கையுடன் இருந்துள்ளார்.

ஆனால் அவரை காதலர்கள் அடுத்தடுத்து ஏமாற்றியதாலும், பணத்தை பறிகொடுத்ததாலும், ஆபாச வீடியோ வெளியாகி விடுமோ என்ற அச்சத்தாலும், ஸ்ராவனி தற்கொலை முடிவுக்கு தூண்டப்பட்டது தெரியவந்தது.

முதற்கட்டமாக சாய் ரெட்டி, தேவராஜ் ரெட்டி ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், தலைமறைவான சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் ரெட்டியைத் தேடிவருகின்றனர்.

Share This News
feature-top
feature-top