The News Sponsor By
feature-top
feature-top

இந்தியாவில் இருந்து முதல் முதலாக ஒஸ்கார் விருது வாங்கிய ஆடை வடிவமைப்பாளரான பானு அதையா தனது 91 வயதில் உயிரிழந்துள்ளார்.

அவரக்கு, 1983 ஆம் ஆண்டு வெளியான காந்தி படத்திற்கு சிறந்த முறையில் ஆடைகளை வடிவமைத்ததற்காக பானு அதையாவுக்கு ஒஸ்கார் விருது கிடைத்தது.

2012 ஆம் ஆண்டில் மூளைக் கட்டி இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் அவர் சமீபத்திய ஆண்டுகளில் உடல்நலம் சரியில்லாமல் படுக்கையிலே இருந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையிலேயே பானு அதையா நேற்று உயிரிழந்துள்ளார். அவரின் இறுதிச் சடங்கு நேற்றே நடந்தது. 

ஏறக்குறைய ஐந்து தசாப்தங்களாக நீடித்த ஒரு வாழ்க்கையில் சிறந்த திரைப்பட தயாரிப்பாளர்களுக்கான ஆடைகளை வடிவமைப்பதில் அதையா புகழ் பெற்று இருந்தார்.

இந்திய சுதந்திரத் தலைவரைப் பற்றிய படத்தில் பணியாற்ற பிரிட்டிஷ் திரைப்படத் தயாரிப்பாளர் ரிச்சர்ட் அட்டன்பரோவின் அழைப்பு அவரை உலகளாவிய முக்கியத்துவத்திற்கு அழைத்துச் சென்றது.

பானு அதையா, ரிச்சர்ட் அட்டன்பரோவ்

சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான விருதை பாராட்டப்பட்ட பிரிட்டிஷ் வடிவமைப்பாளர் ஜோன் மோல்லோவுடன் பகிர்ந்து கொண்டார்.

அதையா 1950 களில் இருந்து 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குரு தத், யஷ் சோப்ரா மற்றும் ராஜ் கபூர் போன்ற பிரபல திரைப்பட தயாரிப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.

பானு அதையாவின் மறைவு குறித்து அறிந்த திரையுலகினர் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

அதையா தனது மகள் ராதிகா குப்தா.

பிரபல ஆடை வடிவமைப்பாளரான நீத்து லல்லா பானு அதையா பற்றி கூறியதாவது,

பானு அதையாவின் மரணம் ஆடை வடிவமைப்பு துறைக்கு பெரிய இழப்பு ஆகும். நான் அவரை முதல் முறையாக சந்தித்ததை மறக்கவே முடியாது. அவர் இந்திய ஆடை வடிவமைப்பு  துறையை ஒஸ்கார் விருது வரை எடுத்துச் சென்றார் என்றார்.

ஒஸ்கார் விருது பெற்ற சவுண்டு என்ஜினியரான ரசூல் பூக்குட்டி கூறியிருப்பதாவது,

இந்தியாவின் முதல் ஒஸ்கார் விருது வென்ற பானு அதையா காலமானார்.  ஒஸ்கார் பற்றி யாருக்கும் தெரியாத போதே நீங்கள் வென்றீர்கள். நீங்கள் எங்களுக்கு எல்லாம் முன்னுதாரணம். உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும். அவரின் இழப்பு எனக்கு தனிப்பட்ட முறையிலும், தி அகாடமிக்கும் பெரிய இழப்பு என்று கூறியுள்ளார்.

பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் கூறியிருப்பதாவது,

 ஒஸ்கார் விருது வென்ற முதல் இந்தியர் பானு அதையா. அவரின் சாதனைகள் இந்திய சினிமாவுக்கு பெருமை தேடித் தந்தது. எங்களின் பிரேம் படத்தில் அவர் வேலை செய்தது எங்கள் பாக்கியம். அனைத்து ஆடை வடிவமைப்பாளர்களுக்கும், ஸ்டைலிஸ்ட்டுகளுக்கும் அவர் இன்ஸ்பிரேஷன். அவரின் ஆத்மா சாந்சியடையட்டும் என்று தெரிவித்துள்ளார்.

பானு அதையா காந்தி படத்திற்காக ஒஸ்கார் தவிர்த்து பாஃப்டா விருதும் பெற்றார். லேகின், லகான் ஆகிய படங்களுக்காக சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருதை இரண்டு முறை வென்றவர்.

அவர் குரு தத்தின் சி.ஐ.டி. படம் மூலம் தன் கெரியரை துவங்கினார். சுமார் 100 படங்களில் ஆடை வடிவமைப்பாளராக வேலை செய்துள்ளார்.

Share This News
feature-top
feature-top