The News Sponsor By
feature-top
feature-top

கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனையின்போது பரிசோதனை குழாய், குரல்வளை ஊடாக பெண்ணொருவரின் நுரையீரலில் சிக்கிய சம்பவமொன்று பிரித்தானியாவிலுள்ள லெய்ஸ்டர் வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தின்பேரில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு, தாதியொருவர் பரிசோதனை மேற்கொண்டிருந்த வேளையில் சோதனை குழாய் தவறுதலாக  உட்செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, அந்த சோதனை குழாய், குறித்த பெண்ணின் குரல்வளை ஊடாக அவரது வலது நுரையீரலில் சிக்கியுள்ளதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த பெண்ணுக்கு நரம்பியல் அறுவை சிகிச்சைக்குப் பிறகு சோதனை குழாயினை அகற்றுவதற்கான மேலதிக சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நோயாளிகளை எவ்வாறு சோதிப்பது என்பது குறித்து தெளிவான வழிகாட்டுதல்  தாதியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்களுக்கு அவசியமென மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Share This News
feature-top
feature-top