The News Sponsor By
feature-top
feature-top

ஒன்ராறியோவில் கொரோனா தாக்கம் வேகமாக அதிகரித்து வருவதால், Toronto, Ottawa, Peel பிராந்தியம் ஆகிய மூன்று பகுதிகளும் மாற்றியமைக்கப்பட்ட இரண்டாம் நிலை கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்ட வேளையில், York பிராந்தியம் மாற்றியமைக்கப்பட்ட இரண்டாம் நிலை கட்டுப்பாடுகளுக்கு நகரவுள்ளது .

எதிர்வரும் திங்கள்கிழமை (அக்டோபர் 19) முதல் York பிராந்தியம் மாற்றியமைக்கப்பட்ட இரண்டாம் நிலைக்கு நகரும் என Ontario முதல்வர் Doug Ford வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

York பிராந்தியத்தில் அணமைய நாட்களில் அதிகளவிலான தொற்றுக்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் கட்டுப்பாடுகளை விதிக்க மாகாண அரசாங்கம் முடிவு செய்துள்ளது. குறைந்தது 28 நாட்களுக்கு York பிராந்தியம் மாற்றியமைக்கப்பட்ட இரண்டாம் நிலை கட்டுப்பாடுகளுக்கு நகரவுள்ளது.

Share This News
feature-top
feature-top