The News Sponsor By
feature-top
feature-top

இலங்கை கிரிகெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை 800 எனும் பெயரில் திரைப்படமாகிறது. இந்நிலையில் இப்படத்தில் தனக்கு வந்த வாய்ப்பை தான் நிராகரித்துவிட்டதாக நடிகர் டிஜே அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

அசுரன் படம் மூலம் நடிகராக திரையுலகில் கால்பதித்தவர் டிஜே அருணாச்சலம். இவர் 800 திரைப்படம் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு பேசியுள்ளார்.

அதில், ''நான் இந்தியாவில் இருந்தபோது 800 படக்குழு என்னை அணுகினர். என்னை முரளிதரனின் இளமைக்கால கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமென தெரிவித்தனர். கதைக்களம் குறித்து கூறினர். இலங்கை - தமிழர்களுக்கும் இடையிலான போர் வாழ்க்கை வரலாற்றில் சித்தரிக்கப்பட்டுள்ளது, அது எனக்கு சரியாகப்படவில்லை. என் அம்மா ஒரு ஈழத்தமிழர்.

போரில் ஏராளமான கொடுமைகள் இருந்தன, மேலும் படத்தின் அரசியலில் நான் ஈடுபட விரும்பவில்லை. அதனால் முடியாது'' எனத் தெரிவித்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்

Share This News
feature-top
feature-top