Published:Category:

20 வயதில் ‘அட்ஜெஸ்ட்மண்ட்’  பண்ண வேண்டும் என்று சொன்னார்கள் - நடிகை  ரெஜினா.

#MIvDC

20 வயதில் ‘அட்ஜெஸ்ட்மண்ட்’  பண்ண வேண்டும் என்று சொன்னார்கள் - நடிகை  ரெஜினா.

தமிழில் கடந்த 2005ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளிவந்த படம் ‘கண்ட நாள் முதல்’. இந்த படத்தில் தனது 15 வயதில் அறிமுகமானார் ரெஜினா கேசான்ரா.

அதன் பின்னர், அழகிய அசுரா, பஞ்சமித்ரம் என சில தமிழ் படங்களில் நடித்தாலும் 2013ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் பிரபலம் ஆனார் ரெஜினா.

இந்த படத்தில் இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தை தொடர்ந்து இவர் தமிழில் ராஜதந்திரம் மாநகரம் சரவணன்இருக்கபயமேன் போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் பார்ட்டி , சிம்புதேவன் இயக்கி வரும் கசட தபர போன்ற படங்களில் நடித்து வருகிறார் ரெஜினா. ஆனால் இவருக்கு நடித்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் தெலுங்கில் படு பிசியாக நடித்து வருகிறார். தற்போது இவர் செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரெஜினாவிடம் சினிமாவில் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் பற்றி கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அவர், அதுபோன்ற சம்பவம் என்னுடைய வாழ்வில் நடந்துள்ளது. எனக்கு ஒருவர் போன் செய்து பேசிக்கொண்டு இருக்கும் போது ‘அட்ஜெஸ்ட்மண்ட்’ செய்ய வேண்டும் என்று சொன்னார். அது என்னவென்று எனக்கு அப்போது தெரியவில்லை. அப்போது எனக்கு 20 வயது தான் இருக்கும். அவர் அப்படி கேட்டதும் நான் என் மேனேஜர் அதை பற்றி பேசுவார் என்று சொன்னேன்.

பின்னர் தான் தெரிந்தது, அவர் சொன்ன ‘அட்ஜெஸ்ட்மண்ட்’ என்ற வார்த்தையின் அர்த்தம். நான் உடனே வேறு எதுவும் பேசாமல் போனை கட் செய்துவிட்டேன். அதன் பின்னர் போனை என் வாழ்வில் அது போன்ற நிகழ்வை சந்தித்து இல்லை. சினிமா துறையை விடுங்கள் இதுபோன்ற அணிதிகழ் பல்வேறு துறைகளில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் ஒரு பெண்ணிடம் கேட்டால் கூட அவர்கள் சொல்ல ஒரு கதை இருக்கும் இதுபோன்ற உலகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கனடாவை தொடர்ந்து பிரேசிலில் கர்ப்பிணி பெண்கள் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி போடுவதற்கு தடை!

#MIvDC

கனடாவை தொடர்ந்து பிரேசிலில் கர்ப்பிணி பெண்கள் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி போடுவதற்கு தடை!

Published:Category:

ஜப்பானில் கரோனா நான்காம் அலை - நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.!

#MIvDC

ஜப்பானில் கரோனா நான்காம் அலை - நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.!

Published:Category:

1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: போர் மூளும் அபாயம்!

#MIvDC

1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: போர் மூளும் அபாயம்!

Published:Category:

இலவசம்! விலைகுறைப்பு! ரொறன்ரோவில் தடுப்பூசி போட்ட மக்களுக்கு சில நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள்!

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

#MIvDC

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

Published:Category:

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

#MIvDC

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

Published:Category:

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

#MIvDC

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

Published:Category:

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

#MIvDC

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

Published:Category:

பாக்யலட்சுமி செழியன் - செம்பருத்தி பார்வதி திருமணம்!

#MIvDC

பாக்யலட்சுமி செழியன் - செம்பருத்தி பார்வதி திருமணம்!

  • Thedipaar