Published:Category:

சென்னையில் சைக்கிளில் வந்து வாக்களித்த விஜய்.

#MIvDC

Listen to news

சென்னையில் சைக்கிளில் வந்து வாக்களித்த விஜய்.

நடிகர் விஜய், நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து வாக்குச்சாவடி மையத்திற்கு சைக்கிளில் வந்து வாக்களித்தார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து, நடிகர் விஜய், சைக்கிளில் புறப்பட்டார். ரசிகர்கள் கூடி விடக் கூடாது என்பதற்காக, அவருடன் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலர் இருசக்கர வாகனங்களில் நெருக்கமாக வந்தனர்.

தனது வீட்டில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணித்து, நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள வேல்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு விஜய் வந்தார்.

 அவரைப் பார்த்ததும் ரசிகர்கள் போலீஸ் அமைத்திருந்த தடுப்புகளையும் மீறி அருகே குழுமினர். பாதுகாப்புக்கு இருந்த போலீசார் ரசிகர்களை அப்புறப்படுத்தி, நடிகர் விஜயை உள்ளே அழைத்துச் சென்றனர். அதன் பிறகு தனது வாக்கை நடிகர் விஜய் பதிவு செய்தார்.

நடிகர் விஜய் வாக்குச் செலுத்திவிட்டு திரும்பியபோது ரசிகர்கள் அதிகளவில் முண்டியடித்ததால், போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

வாக்களித்த பிறகு, மீண்டும் தனது வீட்டுக்கு சைக்கிளில் செல்ல நடிகர் விஜய் முயன்றார். ஆனால் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததன் காரணமாக அந்த முயற்சியை கைவிட்டு, விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவரது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்தபடி நடிகர் விஜய் வீடு திரும்பினார்.

ரசிகர்கள் முண்டியடித்தபடி செல்பி எடுப்பதற்காக ஓடி வந்ததால், கடும் சிரமத்துக்கு இடையே தடுமாற்றத்துடன் இருசக்கர வாகனத்தை அந்த நிர்வாகி ஓட்டினார்.

நடிகர் விஜய் சைக்கிளில் வாக்களிக்க வந்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், அதுகுறித்து பல்வேறு கருத்துகளும் பகிரப்பட்டு வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: போர் மூளும் அபாயம்!

#MIvDC

1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: போர் மூளும் அபாயம்!

Published:Category:

இலவசம்! விலைகுறைப்பு! ரொறன்ரோவில் தடுப்பூசி போட்ட மக்களுக்கு சில நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள்!

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

#MIvDC

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

Published:Category:

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

#MIvDC

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

Published:Category:

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

#MIvDC

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

Published:Category:

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

#MIvDC

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

Published:Category:

பாக்யலட்சுமி செழியன் - செம்பருத்தி பார்வதி திருமணம்!

#MIvDC

பாக்யலட்சுமி செழியன் - செம்பருத்தி பார்வதி திருமணம்!

Published:Category:

தேசிய விருதுபெற்ற கதாசிரியர் கொரோனாவால் மரணம்.

#MIvDC

தேசிய விருதுபெற்ற கதாசிரியர் கொரோனாவால் மரணம்.

Published:Category:

TV நிகழ்ச்சி தொகுப்பாளரான விஜய் சேதுபதி!

#MIvDC

TV நிகழ்ச்சி தொகுப்பாளரான விஜய் சேதுபதி!

  • Thedipaar