Published:Category:

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுவது உறுதி - மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை!

#MIvDC

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுவது உறுதி - மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை!

கொரோனா தொற்று தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போதைய கட்டுப்பாடுகள் பலன் அளிக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டை பொறுத்தவரை கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்க அரசால் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று விகிதம் மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கை பிப்ரவரி 2021 வரை தொடர்ந்து குறைந்து வந்தது. தற்போது ஏப்ரல் 2021-இல் சராசரியாக தினமும் 3900 அதிகமான நபர்களுக்கு புதிய நோய்த் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.

மாநிலம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள், நடமாடும் காய்ச்சல் முகாம்கள், பரிசோதனை மையங்கள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டு, நோய் உறுதி செய்யப்படுபவர்கள் உடனடியாக மருத்துவமனைகள், சுகாதார மையங்கள், கோவிட் கவனிப்பு மையங்களில் அனுமதிக்கவும் அல்லது வீட்டில் தனிமைப்படுத்துவதற்கும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோவிட் சார்ந்த பழக்கங்களான முகக்கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், சமூக இடைவெளி ஆகியவைகளை மீண்டும் கடைபிடிக்க வலியுறுத்தப்படுவதோடு, இதனை மீறுபவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

முயற்சியில் பலன் கிடைக்கவில்லை என்றால் இரவு நேரத்தில் கொரோனா ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும்.

தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்த கொரோனா தொற்று இரண்டாவது அலையை சமாளிக்க, அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

#MIvDC

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

Published:Category:

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

#MIvDC

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

Published:Category:

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

#MIvDC

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

Published:Category:

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

#MIvDC

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

Published:Category:

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

#MIvDC

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

Published:Category:

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

#MIvDC

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

Published:Category:

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

#MIvDC

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

Published:Category:

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

#MIvDC

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

Published:Category:

இந்த இடைவெளியில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டால் கொரோனாவுக்கு எதிர்வினை ஆற்றும் தன்மை 3.5 மடங்கு அதிகரிக்கும்!

#MIvDC

இந்த இடைவெளியில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டால் கொரோனாவுக்கு எதிர்வினை ஆற்றும் தன்மை 3.5 மடங்கு அதிகரிக்கும்!

Published:Category:

முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை - மோசமான அறிவிப்பை வெளியிட்டுள்ள நாடு!

#MIvDC

முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை - மோசமான அறிவிப்பை வெளியிட்டுள்ள நாடு!

  • Thedipaar