Published:Category:

உச்சமடையும் கொரோனா... காங்கிரஸ் முதல்வர்களுடன்.. சோனியா காந்தி இன்று அவசர ஆலோசனை

#MIvDC

உச்சமடையும் கொரோனா... காங்கிரஸ் முதல்வர்களுடன்.. சோனியா காந்தி இன்று அவசர ஆலோசனை

கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது குறித்து ஆலோசிக்கச் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் கலந்துகொள்ளும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் வைரஸ் பாதிப்பு மிக மோசமாக உள்ளது. அங்குத் தினசரி வைரஸ் பாதிப்பு 55 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதையடுத்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற பல்வேறு பகுதிகளிலும் இரவு நேர லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டம் இந்நிலையில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறித்து விவாதிக்க இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் முதல்வர்கள் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் காந்தியும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் தற்போது உள்ள கொரோனா பரவல் குறித்து ஆலோசிக்கப்படும். மேலும், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மாநில முதல்வர்களுக்கு ஆலோசனை வழங்கவுள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி நேற்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதில், உள்நாட்டில் கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு சுமார் 6 கோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது.

எனவே, தற்போதுள்ள நிலையைக் கருத்தில் கொண்டு ஏற்றுமதிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என ராகுல் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் மற்ற கொரோனா தடுப்பூசிகளுக்கும் விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கனடாவை தொடர்ந்து பிரேசிலில் கர்ப்பிணி பெண்கள் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி போடுவதற்கு தடை!

#MIvDC

கனடாவை தொடர்ந்து பிரேசிலில் கர்ப்பிணி பெண்கள் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி போடுவதற்கு தடை!

Published:Category:

ஜப்பானில் கரோனா நான்காம் அலை - நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.!

#MIvDC

ஜப்பானில் கரோனா நான்காம் அலை - நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.!

Published:Category:

1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: போர் மூளும் அபாயம்!

#MIvDC

1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: போர் மூளும் அபாயம்!

Published:Category:

இலவசம்! விலைகுறைப்பு! ரொறன்ரோவில் தடுப்பூசி போட்ட மக்களுக்கு சில நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள்!

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

#MIvDC

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

Published:Category:

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

#MIvDC

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

Published:Category:

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

#MIvDC

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

Published:Category:

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

#MIvDC

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

Published:Category:

பாக்யலட்சுமி செழியன் - செம்பருத்தி பார்வதி திருமணம்!

#MIvDC

பாக்யலட்சுமி செழியன் - செம்பருத்தி பார்வதி திருமணம்!

  • Thedipaar