Published:Category:

வீதியின் பெயர்ப்பலகை விவகாரம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணை - அகற்றுமாறும் பணிப்பு.

#MIvDC

வீதியின் பெயர்ப்பலகை விவகாரம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணை - அகற்றுமாறும் பணிப்பு.

கிளிநொச்சி சாந்தபுரம்  பகுதியில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியின் பெயரில் திறக்கப்பட்ட வீதியின் பெயர்ப்பலகை விவகாரம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் இன்றைய தினம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கரைச்சி பிரதேச சபைக்கு சொந்தமான குறித்த வீதியின் பெயரை வெற்றிவீதி என பெயர்கூட்டப்பட்டு 28.03.2021 அன்று திறந்து வைக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலிற்கு அமைவாக கிளிநொச்சி பொலிசார் இன்று கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இன்று காலை 8.00 மணியளவில் அழைக்கப்பட்ட தவிசாளரிடம் சுமார் ஒரு மணிநேரம் விசாரணைகள் இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.

இதன்போது, குறித்த பெயருக்கு சொந்தமானவர் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி எனவும், புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டதன் பின்னர் சமூகமட்ட செயற்பாடுகளில் முன்னின்று உழைத்தமைக்காக அவரது பெயரை பொதுமக்கள் சூட்டியதாகவும் இன்று இடம்பெற்ற விசாரணைகளின்போது பொலிசாருக்கு தெரிவித்ததாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்தார்.

குறித்த வீதியானது பிரதேச சபைகள் சட்டத்திற்கு அமைவாகவோ அல்லது, வர்த்தமானி அறிவித்தல் ஊடாகவோ பிரதேச சபையினால் திறந்து வைக்கப்படவில்லை எனவும், பொதுமக்கள் தாமாக முன்வந்து குறித்த வீதிக்க பெயர் வைக்க ஏற்பாடு செய்த நிகழ்வில் மக்கள் பிரதிநிதியாக தானும் கலந்து கொண்டதாக குறித்த விசாரணைகளில் தான் குறிப்பிட்டதாக தெரிவித்தார்.

குறித்த வீதிப்பெயர்ப்பலகையை அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் தவறும் பட்சத்தில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கும் வகையில் செயற்பட்டதாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் குறிப்பிட்டதாகவும் தவிசாளர் தெரிவித்தார்.

அதற்கு அமைவாக தாம் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தவிசாளர் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

#MIvDC

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Published:Category:

ஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

#MIvDC

ஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

Published:Category:

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.

#MIvDC

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.

Published:Category:

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.

#MIvDC

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.

Published:Category:

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

#MIvDC

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

Published:Category:

தோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

தோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.

#MIvDC

யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.

Published:Category:

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

#MIvDC

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

Published:Category:

வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும்  மதுபான சாலைகள்.வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் மதுபான சாலைகள்.

#MIvDC

வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும்  மதுபான சாலைகள்.வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் மதுபான சாலைகள்.

Published:Category:

வெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாரில்லை - மாவையின் அழைப்புக்கு அருந்தவபாலன் பதில்.

#MIvDC

வெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாரில்லை - மாவையின் அழைப்புக்கு அருந்தவபாலன் பதில்.

  • Thedipaar