Published:Category:

யோகி பாபு மீது முடி திருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் புகார்!

#MIvDC

யோகி பாபு மீது முடி திருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் புகார்!

நடிகர் யோகி பாபு மீது தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்துள்ளார்கள்.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா ராஜ்குமார் நடித்துள்ள மண்டேலா படம் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகி அனைவருடைய பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் மண்டேலா படத்துக்கு எதிராக தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்துள்ளார்கள்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

யோகி பாபு நடித்த மண்டேலா படம் சமீபத்தில் வெளியானது. அந்தப் படத்தில் முடி திருத்தும் தொழிலாளர்களைப் புண்படுத்தும் காட்சிகள் உள்ளன. எனவே இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம், இயக்குநர், நடிகர் யோகி பாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதன்பிறகு செய்தியாளர்களிடம் மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் கூறியதாவது:

எங்கள் மருத்துவர் சமுதாய மக்கள் தமிழகத்தில் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளார்கள். யோகி பாபு நடித்த மண்டேலா படம் மருத்துவர் சமுதாயத்தையும் முடி திருத்தும் தொழிலாளர்களையும் இழிவுபடுத்தியுள்ளது.

படம் முழுக்க முடி திருத்தும் தொழிலாளர்களை எந்தளவுக்கு இழிவுபடுத்த முடியுமோ அந்தளவுக்கு இழிவுபடுத்தியுள்ளார்கள். காரில் ஏற்றாமல் அலைக்கழிப்பதும் பின்புற வாசலில் முடி திருத்தும் தொழிலாளியை வரச் சொல்வதும் குழந்தைகளிடம் பூச்சாண்டி என்று கூறுவதும் என எங்களை நாகரிகமற்ற முறையில் இழிவுபடுத்தியுள்ளார்கள்.

இதனால் அனைவரும் மனவேதனை அடைந்துள்ளார்கள். இதனால் மண்டேலா படத்தைத் தடை செய்ய வேண்டும், யோகி பாபு உள்ளிட்ட படக்குழுவினரும் விஜய் தொலைக்காட்சியும் எங்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். படத்துக்குத் தடை விதிக்கவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனக் கூறியுள்ளனர்.  

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியாவில் 8 தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

வவுனியாவில் 8 தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

#MIvDC

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

Published:Category:

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

#MIvDC

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

Published:Category:

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

#MIvDC

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

Published:Category:

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

#MIvDC

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

Published:Category:

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

#MIvDC

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

Published:Category:

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

#MIvDC

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

Published:Category:

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

#MIvDC

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

Published:Category:

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

#MIvDC

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

Published:Category:

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

#MIvDC

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

  • Thedipaar