Published:Category:

மியான்மரில் போராட்டம் நடத்திய மருத்துவ தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு.

#MIvDC

Listen to news

மியான்மரில் போராட்டம் நடத்திய மருத்துவ தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு.

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய மருத்துவ தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். பலர் படுகாயம் அடைந்தனர்.

மியான்மரில் ஜனநாயக ரீதியிலான அரசை ஏற்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

மூன்றாவது மாதமாக ராணுவ ஆட்சிக்கு எதிராகவும், ஜனநாயக ஆட்சிக்கு ஆதரவாகவும் பல தரப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால் போராட்டக்காரர்களை ராணுவம் ஒடுக்கி வருகிறது. இதற்கு எதிராக சர்வதேச அளவில் பலத்த எதிர்ப்பு குரல்கள் எழுந்து வருகின்றன.

மியான்மரில் 5 நாள் புத்தாண்டு விடுமுறை கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ஆனால் ஜனநாயக ஆதரவு இயக்கத்தினர், தங்கள் வழக்கமான கொண்டாட்டங்களை ரத்து செய்து விட்டு, ராணுவ ஆட்சி மீதான எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் போராட்டங்களில் கவனம் செலுத்தி வந்தனர்.

இந்த நிலையில், அந்த நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலேவில் நேற்று அறவழிப்போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து, மருத்துவ தொழிலாளர்கள் பெரிய அளவில் கூடி இருந்தார்கள்.

ஆனால் அவர்களை விரட்டியடிப்பதற்காக அங்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

போராட்டக்காரர்களில் பலரை சுற்றி வளைத்து கைது செய்த ராணுவம், துப்பாக்கிச்சூடு நடத்தியது.

அந்தப்பகுதியில் உள்ள ஒரு மசூதி வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. பலர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே மியான்மர் அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம், இதுவரை அங்கு நடந்த போராட்டங்களில் 715 எதிர்ப்பாளர்களை ராணுவம் கொன்று குவித்துள்ளதாக கூறுகிறது.
 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

#MIvDC

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

Published:Category:

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

#MIvDC

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

Published:Category:

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

#MIvDC

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

Published:Category:

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

#MIvDC

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

Published:Category:

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

#MIvDC

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

Published:Category:

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

#MIvDC

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

Published:Category:

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

#MIvDC

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

Published:Category:

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

#MIvDC

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

Published:Category:

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

#MIvDC

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

Published:Category:

இந்த இடைவெளியில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டால் கொரோனாவுக்கு எதிர்வினை ஆற்றும் தன்மை 3.5 மடங்கு அதிகரிக்கும்!

#MIvDC

இந்த இடைவெளியில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டால் கொரோனாவுக்கு எதிர்வினை ஆற்றும் தன்மை 3.5 மடங்கு அதிகரிக்கும்!

  • Thedipaar