Published:Category:

நடிகர் விவேக் உடல்நிலை பாதிப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை!

#MIvDC

நடிகர் விவேக் உடல்நிலை பாதிப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை!

மாரடைப்பு காரணமாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கின் உடல் நிலை குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று கேட்டறிந்தார்.

விவேக்கின் உடல் நிலை குறித்து மருத்துவர் ராஜூ சிவசாமி அளித்த பேட்டியில், இன்று காலை 11 மணியளவில் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் கூறினார்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு அவரது உடல் நிலை தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும் அதன் பிறகே அடுத்தக்கட்டம் குறித்து சொல்ல முடியும் என கூறினார்.

விவேக்கிற்கு ரத்தக்குழாயில் அடைப்பு இருந்ததால் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தற்போது அது சரி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பின்னர் பேசிய தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒரு வாரத்திற்கு முன்பே விவேக் தானாகவே தடுப்பூசி போடுவதற்கு வருகிறேன் என்று கேட்டிருந்தார். அவர் போட்டுக்கொண்டால் அதனை பார்த்து பலர் தடுப்பூசி போடுவதற்கு முன்வருவார்கள் என்று கூறி அவரே நேற்று வருகை தந்திருந்தார்.

மத்திய அரசின் தடுப்பூசி வழிகாட்டு நெறிமுறைகளின் படி, இருதய கோளாறு, புற்றுநோய் போன்ற பல்வேறு நோய் உள்ளவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாகத்தான் உள்ளது. நேற்றைய தினம் எங்களுடன் இருந்தவருக்கு, இன்றைய தினம் இதுபோன்ற இதய கோளாறு ஏற்பட்டுள்ளது. எனினும், இதற்கும் நேற்று தடுப்பூசி போட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை.

விவேக் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மருத்துவமனையில் நேற்று மட்டும் 800 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, இன்றும் அங்கு ஏராளமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

ரத்தக்குழாயில் ஒரே நாளில் அடைப்பு ஏற்படாது. இணை நோய் உள்ளவர்களும் நிச்சயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளிகளும் போட்டுக்கொள்ள வேண்டும்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கும், விவேக்கின் உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கும் நூறு சதவீதம் தொடர்பில்லை என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: போர் மூளும் அபாயம்!

#MIvDC

1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: போர் மூளும் அபாயம்!

Published:Category:

இலவசம்! விலைகுறைப்பு! ரொறன்ரோவில் தடுப்பூசி போட்ட மக்களுக்கு சில நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள்!

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

#MIvDC

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

Published:Category:

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

#MIvDC

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

Published:Category:

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

#MIvDC

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

Published:Category:

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

#MIvDC

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

Published:Category:

பாக்யலட்சுமி செழியன் - செம்பருத்தி பார்வதி திருமணம்!

#MIvDC

பாக்யலட்சுமி செழியன் - செம்பருத்தி பார்வதி திருமணம்!

Published:Category:

தேசிய விருதுபெற்ற கதாசிரியர் கொரோனாவால் மரணம்.

#MIvDC

தேசிய விருதுபெற்ற கதாசிரியர் கொரோனாவால் மரணம்.

Published:Category:

TV நிகழ்ச்சி தொகுப்பாளரான விஜய் சேதுபதி!

#MIvDC

TV நிகழ்ச்சி தொகுப்பாளரான விஜய் சேதுபதி!

  • Thedipaar