Published:Category:

குடும்பஸ்தர் அடித்து கொலை - பொலிசார் விசாரணை

#MIvDC

குடும்பஸ்தர் அடித்து கொலை - பொலிசார் விசாரணை

கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் குடும்பஸ்தர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவபுரம் பகுதியில் குறித்த சம்பவம் கடந்த 14ம் திகதி இடம் பெற்றுள்ளது.

காயமடைந்த குடும்பத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 42 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான  மாயழகு மனோகரன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 14ம் திகதி சித்திரைப்புத்தாண்டு அன்று இரவு 9 மணியளவில் சிவபுரம் கிராமத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றள்ளது.

இரு நபர்களிற்கிடையில் முரண்பாடு காணப்பட்ட நிலையில் வீதியால் பயணித்த குறித்த நபர் சம்பவ இடத்தில் முரண்பட்டுக்கொண்டிருந்த அவரது உறவினரிடம் என்ன சத்தம் என வினவியுள்ளார்.

இதன்போது குறித்த நபர் மீது மற்றய நபர் தாக்குதல் மேற்கொண்டதாகவும், தாக்குதல் மேற்கொண்டவர் மது போதையில் இருந்ததாகவும் சம்பவத்தை அவதானித்தவர்கள் குறிப்பிடுகின்றனர். இதனை அடுத்து தாக்குதலிற்குள்ளான நபரை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

தொடர்ந்து அவர் மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பயனளிக்காது என தெரிவித்து மீண்டும் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கனடாவை தொடர்ந்து பிரேசிலில் கர்ப்பிணி பெண்கள் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி போடுவதற்கு தடை!

#MIvDC

கனடாவை தொடர்ந்து பிரேசிலில் கர்ப்பிணி பெண்கள் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி போடுவதற்கு தடை!

Published:Category:

ஜப்பானில் கரோனா நான்காம் அலை - நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.!

#MIvDC

ஜப்பானில் கரோனா நான்காம் அலை - நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.!

Published:Category:

1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: போர் மூளும் அபாயம்!

#MIvDC

1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: போர் மூளும் அபாயம்!

Published:Category:

இலவசம்! விலைகுறைப்பு! ரொறன்ரோவில் தடுப்பூசி போட்ட மக்களுக்கு சில நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள்!

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

#MIvDC

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

Published:Category:

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

#MIvDC

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

Published:Category:

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

#MIvDC

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

Published:Category:

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

#MIvDC

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

Published:Category:

பாக்யலட்சுமி செழியன் - செம்பருத்தி பார்வதி திருமணம்!

#MIvDC

பாக்யலட்சுமி செழியன் - செம்பருத்தி பார்வதி திருமணம்!

  • Thedipaar