Published:Category:

ஈழத் தமிழர்கள் விவசாயம் செய்து வந்த நிலங்களை அரசாங்கம் பறிக்கிறது – வைகோ தெரிவிப்பு.

#MIvDC

Listen to news

ஈழத் தமிழர்கள் விவசாயம் செய்து வந்த நிலங்களை அரசாங்கம் பறிக்கிறது – வைகோ தெரிவிப்பு.

ஈழத் தமிழர்கள் எத்தனையோ நூற்றாண்டுகளாக, தலைமுறை தலைமுறைகளாக விவசாயம் செய்து வந்த நிலங்களை இலங்கை அரசாங்கம் பறிக்கிறது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“உலக நாடுகளை ஏமாற்ற ஏற்கனவே பறித்த நிலங்களைத் திரும்ப வழங்குவதாகப் போக்குக் காட்டிக்கொண்டே, மறுபுறம் புதிய நிலங்களைப் பறிக்கின்றது.

அண்மையில் மட்டக்களப்பு தமிழ் விவசாயிகளின் நிலங்களில் இலங்கை வனத்துறையினர் திடீரென எல்லைக் கற்களை நட்டு, இவை எல்லாம் வனப்பகுதிகள் என அறிவிப்பு செய்து இருக்கின்றது.

இந்த இடங்களை விட்டுத் தமிழர்கள் வெளியேற வேண்டும் என அச்சுறுத்துகிறார்கள்.

எத்தனையோ நூற்றாண்டுகளாக, தலைமுறை தலைமுறைகளாகத் தமிழர்கள் விவசாயம் செய்து வந்த நிலங்களைப் பறிக்கின்றார்கள்.

ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு நெருக்கமான சிங்கள நிறுவனங்கள், பெரிய கருவிகளைக் கொண்டு வந்து மணல் அள்ளுகின்றார்கள். அதனால், அருகில் உள்ள தமிழர்களின் விளைநிலங்களில் பயிர்கள் அழிவதைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை. தமிழர்களின் எதிர்ப்புகளைக் கண்டு கொள்வது இல்லை.

தொல்லியல் துறை ஆய்வு என்ற பெயரில் கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் துறை ஆய்வுகளை மேற்கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒரு குழு அமைத்தார்.

அந்தக் குழுவில் சிங்களர்களும் பெளத்த மதகுருக்களும் மட்டுமே இடம்பெற்று இருக்கின்றார்கள்.

இதுபோன்ற முயற்சிகளால் தமிழர்களின் நிலங்களை இலங்கை அரசு பறிப்பதை இந்திய அரசும் உலக நாடுகளும் தடுத்து நிறுத்த வேண்டும்.

ஏற்கனவே பறித்துக்கொண்ட நிலங்களில் இருந்து சிங்களக் குடியேற்றங்களையும் சிங்களப் படை முகாம்களையும் அகற்ற வேண்டும் என வலியுறுத்த வேண்டும்” என அவர் கோரிககை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியாவில் 8 தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

வவுனியாவில் 8 தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

#MIvDC

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

Published:Category:

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

#MIvDC

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

Published:Category:

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

#MIvDC

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

Published:Category:

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

#MIvDC

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

Published:Category:

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

#MIvDC

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

Published:Category:

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

#MIvDC

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

Published:Category:

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

#MIvDC

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

Published:Category:

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

#MIvDC

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

Published:Category:

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

#MIvDC

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

  • Thedipaar