Published:Category:

மட்டக்களப்பு மாவட்டத்தில் 330கொரனா தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

மட்டக்களப்பு மாவட்டத்தில் 330கொரனா தொற்றாளர்கள் அடையாளம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 02 மரணமடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (12) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மூன்றாவது கொவிட் அலையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 330 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் 07 மரணங்கள் இந்த மூன்றாவது அலையில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 02 மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

ஆரையம்பதி சுகாதார பிரிவில் 08 பேரும் மட்டக்களப்பு மற்றும் ஓட்டமாவடி சுகாதார பிரிவில் தலா 07 பேரும் களுவாஞ்சிகுடி சுகாதார பிரிவில் 03 பேரும் வாழைச்சேனை,பட்டிப்பளை,செங்கலடி ஆகிய சுகாதார பிரிவுகளில் தலா ஒருவரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று மரணங்களாக ஒருவர் மட்டக்களப்பு சுகாதார பிரிவிலும் ஒருவர் ஆரையம்பதி சுகாதார பிரிவிலும் இடம்பெற்றுள்ளது.

ஆரையம்பதி சுகாதார பிரிவில் மரணித்தவர் அவர் மரணித்ததன் பின்னரே அவர் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 1313 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 16மரணங்களும் இடம்பெற்றுள்ளன.

மூன்றாவது அலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 330 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 07 மரணங்கள் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு 54 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதில் வாழைச்சேனை பகுதியில் அதிகளவாக 129 ஆகவும் மட்டக்களப்பு சுகாதார பிரிவில் 105 ஆகவும் காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் ஏற்படும் மரணவீதமானது 2.1ஆக காணப்படுகின்றது.

இது தேசிய ரீதியில் 0.6ஆக காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மரண வீதம் மூன்று மடங்கிற்கும் அதிகமாக காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மரண வீதம் அதிகமாகவுள்ளதன் காரணமாக பொதுமக்கள் இதன் ஆபத்து நிலையினை அறிந்துகொண்டு சுகாதார நடைமுறைகளை இறுக்கமான முறையில் பின்பற்றவேண்டும்.

காய்ச்சல்,சுவாசம் தொடர்பான குணம்குறிகள் இருமல்,தடுமல்,மூச்சு கஸ்டம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் உடனடியாக வைத்தியரை நாடி சரியான சிகிச்சைகளைப்பெற்றுக்கொள்ளவும்.

அத்துடன் வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள், சென்று வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பினை பேணியவர்கள் தாமாக முன்வந்து உங்களுக்குரிய சுகாதார பிரிவுக்கு சென்று அன்டிஜன்,பீசிஆர் பரிசோதனைகளை செய்வதன் மூலம் உங்களையும் நாட்டு மக்களையும் பாதுகாத்துக்கொள்ளமுடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று கொரோனா சிகிச்சை நிலையங்கள் உள்ளன.

பெரியகல்லாறு,காத்தான்குடி,கரடியனாறு ஆகிய வைத்தியசாலைகளில் இந்த சிகிச்சைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதில் சிகிச்சை பெறுபவர்களின் 70 வீதத்திற்கும் அதிகமானவர்கள் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இவர்கள் பத்து தினங்களின் பின்னர் வீடு செல்லமுடியும்.அவர்களுக்குhன போக்குவரத்துகள் அந்ததந்த மாவட்டங்கள் ஏற்பாடுசெய்துதரவேண்டியுள்ளது.

இருந்தும் அவர்கள் வாகனங்களை அனுப்பாத சந்தர்ப்பத்தில் நாங்கள் எங்கள் வாகனத்தின் மூலம் அவர்களை அங்கு அனுப்பவேண்டிய நிலையிருக்கின்றது.

இதன் காரணமாக சிகிச்சை பெறுவோரை அனுப்புவதற்கு சிறு தாமத நிலையேற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக பெற்றோரால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ள இளைஞனின் சடலம் இரண்டாவது தடவையாக பிரேத பரிசோதனை.

#MIvDC

பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக பெற்றோரால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ள இளைஞனின் சடலம் இரண்டாவது தடவையாக பிரேத பரிசோதனை.

Published:Category:

பயணத்தடைகள் இன்று காலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டம் வழமைக்கு திரும்பியுள்ளது.

#MIvDC

பயணத்தடைகள் இன்று காலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டம் வழமைக்கு திரும்பியுள்ளது.

Published:Category:

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

#MIvDC

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Published:Category:

ஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

#MIvDC

ஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

Published:Category:

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.

#MIvDC

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.

Published:Category:

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.

#MIvDC

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.

Published:Category:

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

#MIvDC

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

Published:Category:

தோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

தோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.

#MIvDC

யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.

Published:Category:

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

#MIvDC

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

  • Thedipaar