Published:Category:

இலுப்பை கடவை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பற்ற பண்ணைகளினால் மக்கள் அவதி.

#MIvDC

இலுப்பை கடவை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பற்ற பண்ணைகளினால் மக்கள் அவதி.

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலக பிரிவில் உள்ள இலுப்பை கடவை பகுதியில் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் உரிய பாதுகாப்பு நடைமுறை இன்றி அமைக்கப்பட்டு பராமரிப்பு இன்றி காணப்படும் நண்டு மற்றும் அட்டை வளர்ப்பு  பண்ணைகளினால்  பல்வேறு பிரச்சினைகளுக்கும், சுகாதார சீர்கேடுகளுக்கு முகம் கொடுப்பதாகவும் இலுப்பைக் கடவை பகுதியை சேர்ந்த பாதீக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இலுப்பை கடவை பகுதியில் அரச மாணியத்தில் மக்கள் குடியிருக்கும் பகுதியில் மிக ஆழமான  குழிகள் தோண்டப்பட்டு வீடுகளின் எல்லைகளிலும் பின்பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள குறித்த பண்ணைகள் மற்றும் பண்ணைகளுக்கு நீர் பெற்றுக்கொள்ள வெட்டப்பட்ட பாதுகாப்பற்ற வாய்கால் காரணமாகவும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதுடன் வாழ்வாதார தொழில் செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் குறித்த பகுதியில் அட்டை மற்றும் நண்டு பிடிக்கும் தொழிலில் ஈடுபடும் பெண் தலைமைத்துவ குடும்பங்களை சேர்ந்த பெண்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த பண்ணை அமைக்கப்பட்டு பண்டுகள் அமைக்கப்பட்ட காலப்பகுதியில் இருந்து மழை நீர் கடலுடன் கடக்க முடியாத நிலையில் மக்கள் குடியிருப்புக்களில் புகுந்து பாரிய சேதங்களை ஏற்படுத்துவதாகவும் கடல் நீர் மற்றும் மழைநீர் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் கடலுக்கு செல்லும் நடை பாதைகளை மறித்து பண்ணைகள் அமைக்கப்படமையினால் பல கிலோமீற்றர்கள் சுற்றியே தற்போது கடலுக்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதே நேரம் கடல் நீர் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நிழைவதனால் நன்னீர் உவர் நீராக மாறி உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்

குறித்த பிரச்சினை தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலளரிடன் தெரியப்படுத்தியும் இதுவரை ஒழுங்காண பாதுகாப்பு நடவடிக்கையோ மாற்று நடவடிக்கையோ மேற்கொண்டு தரவில்லை எனவும் குற்றம் சுமத்துகின்றனர்

எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வாறு மக்கள் குடியிருப்பு பகுதிகளில் இவ்வாறான பண்ணை அமைக்க அனுமதி வழங்கினார்கள்? எனவும் அவ்வாற பண்ணையின் பாதுகாப்பு நடை பின்பற்றப்படாத நிலையில் ஏன் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ள வில்லை எனவும் தெளிவு படுத்த வேண்டும் எனவும் விரைவில் உரிய முறையில் பராமறிப்பற்ற வகையில் காணப்படும் பண்ணைகளை மூடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் வினவிய போது,,

 குறித்த பகுதியில் அமைக்கப்பட்ட பண்ணைகளுக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்பது தொடர்பாக உரிய திணைக்களங்களுக்கு விளக்கம் கோரி கடித்தம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் விபரங்கள் கிடைக்க பெற்ற பின்னர் மேலதிக நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கிசாளினியின் மரணத்திற்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

கிசாளினியின் மரணத்திற்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி ஹிசாலினுக்கு நீதிவேண்டி மட்டக்களப்பில்  கவன ஈர்ப்பு போராட்டம் .

#MIvDC

துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி ஹிசாலினுக்கு நீதிவேண்டி மட்டக்களப்பில்  கவன ஈர்ப்பு போராட்டம் .

Published:Category:

லிந்துலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் நடிகை ஹயசின்த் விஜேரத்ன உயிரிழப்பு.

#MIvDC

லிந்துலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் நடிகை ஹயசின்த் விஜேரத்ன உயிரிழப்பு.

Published:Category:

மொழியா, தேசமா என்றால் எனக்கு மொழி தான் முக்கியம் - ஜி.வி.பிரகாஷ்

#MIvDC

மொழியா, தேசமா என்றால் எனக்கு மொழி தான் முக்கியம் - ஜி.வி.பிரகாஷ்

Published:Category:

‘மகாமுனி’ படத்துக்கு மேலும் 3 சர்வதேச விருது.

#MIvDC

‘மகாமுனி’ படத்துக்கு மேலும் 3 சர்வதேச விருது.

Published:Category:

24 பேருக்கு எகிப்து மரண தண்டனை.

#MIvDC

24 பேருக்கு எகிப்து மரண தண்டனை.

Published:Category:

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது : இந்திய மத்திய அரசு

#MIvDC

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது : இந்திய மத்திய அரசு

Published:Category:

ஓமான் வளைகுடாவில் தாக்குதலுக்குள்ளான இஸ்ரேலிய கப்பல்.

#MIvDC

ஓமான் வளைகுடாவில் தாக்குதலுக்குள்ளான இஸ்ரேலிய கப்பல்.

Published:Category:

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தில் 473 கடல் உயிரினங்கள் மரணம்.

#MIvDC

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தில் 473 கடல் உயிரினங்கள் மரணம்.

Published:Category:

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ்.

#MIvDC

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ்.

  • Thedipaar