Published:Category:

சர்வதேச நீதிமன்றில் முற்படுத்தினால் மாத்திரமே தீர்வு கிடைக்கும். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

#MIvDC

சர்வதேச நீதிமன்றில் முற்படுத்தினால் மாத்திரமே தீர்வு கிடைக்கும். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முற்படுத்துவதனூடாகவே எமக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (30) முன்னெடுக்கப்பட்டது.

அதன் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

எமக்கு சர்வதேச நீதி கிடைப்பதற்காக நாம் போராடி வருகின்றோம். இன்று பல்வேறு அமைப்புகளையும், கட்சிகளையும் சார்ந்தவர்கள் சர்வதேச நீதி கிடைப்பதற்கு தடையாக இருந்து அரசை பாதுகாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை மனிதஉரிமை ஆணைக்குழுவிற்கு எம்மை அழைத்து செல்வதற்கான நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இத்தனை வருடங்களாக வெயிலிலும் , மழையிலும் நாம் போராடி கொண்டிருந்த போது அவர்களது அக்கறை எங்கே போனது.

உள்ளூரில் போராடி எதனைநாம் பெற்றுக்கொண்டோம் ஆகவே. இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முற்படுத்துவதன் மூலமே எமக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும். என்பதை கூறிக்கொள்கிறோம்.

இத்தனை வருடங்களாக நாம் போராடி வரும் நிலையில் எமக்கான நீதி கிடைப்பதற்கு எவரும் உறுதுணையாக இருந்ததில்லை. அந்த வலியை அனுபவிப்பவர்களால் மாத்திரமே உணர்ந்து கொள்ள முடியும்.

எமதுபோராட்டம் வியாபார நோக்கத்திற்கானதல்ல சுயநலத்திற்கானதல்ல. எமது அன்பான உறவுகளின் உயிருடன் தொடர்புபட்டது.

எமக்கான நீதி விரைவில் கிடைக்கும் என்பதற்காகவே தொடர்ச்சியாக போராடுகிறோம். எமக்கு வாழ்வாதாரம் வழங்குவதற்கோ அரச தரப்பிடம் முற்படுத்துவதற்கோ யாரும் முயற்சி செய்ய வேண்டாம். என்றனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

Published:Category:

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

#MIvDC

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

Published:Category:

அரசியல் கைதிகளின் விடுதலை : தியாகி திலீபனின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை -அருட்தந்தை மா.சத்திவேல்

#MIvDC

அரசியல் கைதிகளின் விடுதலை : தியாகி திலீபனின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை -அருட்தந்தை மா.சத்திவேல்

Published:Category:

கசிப்பு உற்பத்தி நிலையம் விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

#MIvDC

கசிப்பு உற்பத்தி நிலையம் விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Published:Category:

மன்னாரில் திருட்டு பழி - 14 வயது சிறுவன் தூக்கிட்டு மரணம் - கொலையா? என சந்தேகம்.

#MIvDC

மன்னாரில் திருட்டு பழி - 14 வயது சிறுவன் தூக்கிட்டு மரணம் - கொலையா? என சந்தேகம்.

Published:Category:

கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட 12 பேருக்கு தொற்று.

#MIvDC

கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட 12 பேருக்கு தொற்று.

Published:Category:

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில்  முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

#MIvDC

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில்  முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

Published:Category:

கனடா மீண்டும் ஒரு தோ்தலைச் சந்திக்கும் நிலைமை ஏற்படலாம்..!

#MIvDC

கனடா மீண்டும் ஒரு தோ்தலைச் சந்திக்கும் நிலைமை ஏற்படலாம்..!

Published:Category:

மாடு சிறுவனை முட்டித் தாக்கும் பதைபதைப்பான காட்சி..!

#MIvDC

மாடு சிறுவனை முட்டித் தாக்கும் பதைபதைப்பான காட்சி..!

  • Thedipaar