Published:Category:

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது : இந்திய மத்திய அரசு

#MIvDC

Listen to news

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது : இந்திய மத்திய அரசு

இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு சென்ற அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எனத் தெரிவித்து அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது என இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கு அகதிகளாக சென்ற இலங்கை தமிழர்கள் தங்களுக்கு இந்திய குடியுரிமை வேண்டும் என்றும், நீண்ட நாட்களாக தமிழகத்தில் நாங்கள் குடியிருக்கின்றோம் என்றும், எங்களது பூர்வீகம் தமிழ்நாடு தான், எங்களது முன்னோர்கள் வணிகரீதியாக இலங்கைக்கு சென்றார்கள் என்றும், தற்போது அங்குள்ள அரசியல் சூழலின் காரணமாக மீண்டும் அகதிகளாக நாங்கள் தமிழகம் திரும்பி விட்டோம் என்றும், எனவே எங்களுக்கு குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இலங்கை அகதிகள் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை கடந்த 2019 ஆம் ஆண்டு நீதிபதி சுவாமிநாதன் விசாரணை செய்து இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கின்றது? அவர்களது மனுவை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து தற்போது உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தலைமை நீதிபதி அமர்வு முன் மத்திய அரசு மேல் முறையீடு செய்திருந்தது.

இந்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தது.

இதன் விசாரணையில், இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு சென்ற அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள்.  

எனவே அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.  

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

Published:Category:

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

#MIvDC

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

Published:Category:

அரசியல் கைதிகளின் விடுதலை : தியாகி திலீபனின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை -அருட்தந்தை மா.சத்திவேல்

#MIvDC

அரசியல் கைதிகளின் விடுதலை : தியாகி திலீபனின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை -அருட்தந்தை மா.சத்திவேல்

Published:Category:

கசிப்பு உற்பத்தி நிலையம் விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

#MIvDC

கசிப்பு உற்பத்தி நிலையம் விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Published:Category:

மன்னாரில் திருட்டு பழி - 14 வயது சிறுவன் தூக்கிட்டு மரணம் - கொலையா? என சந்தேகம்.

#MIvDC

மன்னாரில் திருட்டு பழி - 14 வயது சிறுவன் தூக்கிட்டு மரணம் - கொலையா? என சந்தேகம்.

Published:Category:

கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட 12 பேருக்கு தொற்று.

#MIvDC

கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட 12 பேருக்கு தொற்று.

Published:Category:

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில்  முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

#MIvDC

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில்  முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

Published:Category:

கனடா மீண்டும் ஒரு தோ்தலைச் சந்திக்கும் நிலைமை ஏற்படலாம்..!

#MIvDC

கனடா மீண்டும் ஒரு தோ்தலைச் சந்திக்கும் நிலைமை ஏற்படலாம்..!

Published:Category:

மாடு சிறுவனை முட்டித் தாக்கும் பதைபதைப்பான காட்சி..!

#MIvDC

மாடு சிறுவனை முட்டித் தாக்கும் பதைபதைப்பான காட்சி..!

  • Thedipaar