Published:Category:

இலங்கை தமிழ் அகதிகள் சட்டவிரோத குடியேறிகளா? ராமதாஸ் கடும் சாடல்..!

#MIvDC

இலங்கை தமிழ் அகதிகள் சட்டவிரோத குடியேறிகளா? ராமதாஸ் கடும் சாடல்..!

தமிழ்நாட்டில் வாழும் இலங்கை அகதிகள் அனைவரும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என மத்திய அரசு கூறியிருப்பது மனிதநேயமற்றது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் முகாமில் வாழும் ஈழத்தமிழர்கள் தங்களுக்கு இந்தியக் குடியுரிமை கோரி தொடர்ந்த வழக்குகளை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் ஒற்றை நீதிபதி, அவர்கள் அனைவரிடமும் விண்ணப்பம் பெற்று, மத்திய அரசுக்கு அனுப்பி இந்தியக் குடியுரிமை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கும்படி திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஆணையிட்டார். அதன்மீது நடவடிக்கைகளை மேற்கொள்ளாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க ஆணையிட்டு ஒற்றை நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. 

அப்போதுதான் மத்திய அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என கூறியுள்ளார். மேலும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

மத்திய அரசின் இந்த நிலைப்பாடு தவறானது; சூழல்களை கருத்தில் கொள்ளாத எந்திரத்தனமானது ஆகும். இந்தியாவுக்குள் கடவுச்சீட்டு, தங்கும் அனுமதி (விசா) போன்ற ஆவணங்கள் இல்லாமல் வந்தவர்கள், உரிய ஆவணங்களுடன் இந்தியாவுக்கு வந்து தங்கும் அனுமதி காலம் முடிந்த பிறகும் இந்தியாவுக்குள் தங்கி இருப்பவர்கள் ஆகியோர் தான் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று இந்தியச் சட்டம் கூறுகிறது.

இந்த வரையறை இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு பொருந்தாது. இலங்கைத் தமிழ் அகதிகள் எவரும் தங்களின் சொந்த நாட்டை விட்டு விட்டு சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக இந்தியாவில் குடியேறவில்லை. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், சிங்களப் படைகளுக்கும் கடந்த 1980-களின் தொடக்கத்திலிருந்து 2009-ஆம் ஆண்டு வரை உக்கிரமாக போர் நடைபெற்றது. அந்தக் காலக்கட்டத்தில் சிங்களப் படையினர் நடத்திய இனப்படுகொலைகளில் உயிர் பிழைப்பதற்காகவும், சிங்களப் படையினரின் பாலியல் அத்துமீறல்கள், உடல்ரீதியிலான கொடுமைகள் ஆகியவற்றிலிருந்து தப்பிப்பதற்காகவும் தான் அவர்கள் இந்தியாவுக்குள் வந்தனர்.

அவர்கள் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையவில்லை. கடல்வழியாக வந்தவர்கள் காவல்துறையினரிடம் சரணடைந்து, மத்திய, மாநில அரசுகளின் கண்காணிப்பில் தான் அவர்கள் காலம் கழித்து வருகின்றனர். அவர்கள் எந்த சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடவில்லை. அவர்களை சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்று குற்றஞ்சாட்டுவது தவறாகும்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மதம், இனம் ஆகியவற்றின் பெயரால் கொடுமைகளுக்கு ஆளாகி, இந்தியாவுக்கு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன்வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் போது, இலங்கையிலிருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு மட்டும் அந்த உரிமை மறுக்கப்படுவது சரியல்ல. எனவே, இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது தான் சரியானது ஆகும். ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரி சட்டப்பேரவையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

டிஜிட்டல் வசதிகளுடன்கூடிய புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை இலங்கை வங்கி நகர கிளை திறந்து வைப்பு.

#MIvDC

டிஜிட்டல் வசதிகளுடன்கூடிய புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை இலங்கை வங்கி நகர கிளை திறந்து வைப்பு.

Published:Category:

ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் காயம்.

#MIvDC

ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் காயம்.

Published:Category:

உரத்தினை வழங்குமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

உரத்தினை வழங்குமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிப்பு.

#MIvDC

கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிப்பு.

Published:Category:

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் காலமானார்.

#MIvDC

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் காலமானார்.

Published:Category:

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது

#MIvDC

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது

Published:Category:

அறிவித்தலின்றி பயணித்த புகையிரதம் - மாடுகள் பலி.

#MIvDC

அறிவித்தலின்றி பயணித்த புகையிரதம் - மாடுகள் பலி.

Published:Category:

பசளையினைப்பெற்றுக்கொள்ள அனைவரும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#MIvDC

பசளையினைப்பெற்றுக்கொள்ள அனைவரும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 12 பேர் உயிரிழப்பு.

#MIvDC

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 12 பேர் உயிரிழப்பு.

Published:Category:

மீனவர்களுக்கான அவசர அறிவித்தல்.

#MIvDC

மீனவர்களுக்கான அவசர அறிவித்தல்.

  • Thedipaar