Published:Category:

பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் காலமானார்.

#MIvDC

பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் காலமானார்.

தமிழ் சினிமாவில் நடன இயக்குனர் மற்றும் நடிகராக பலரால் அறியப்பட்டவர் சிவசங்கர் மாஸ்டர்  72 வயதில்  உயிரிழந்துள்ளார் .

இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு, அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்த  நிலையில்  ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது.

அவரது நுரையீரல் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. அவரது மூத்த மகனும் கொரானாவால் பாதிக்கப்பட்டு அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதற்கிடையே சிவசங்கர் மாஸ்டரின் சிகிச்சைக்கு தேவையான பணத்தை கட்டமுடியாமல் அவரது குடும்பம் கஷ்டப்படுவதாக தகவல் வெளியானது.

இதையடுத்து நடிகர்கள் சிரஞ்சீவி, தனுஷ், சோனு சூட் ஆகியோர் உதவி செய்தனர்.

இந்நிலையில், வைத்தியர்கள் தொடர் சிகிச்சை அளித்தும் பலனளிக்கவில்லை.

நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்துள்ளார்.

அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சிவசங்கர் மாஸ்டரின் உடலுக்கு இன்று பிற்பகல் இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவசங்கர் மாஸ்டர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்கு துட்டு, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எட்டோபிகோக் டவுன்ஹவுஸ் வளாகத்தில் தீ விபத்து!

#MIvDC

எட்டோபிகோக் டவுன்ஹவுஸ் வளாகத்தில் தீ விபத்து!

Published:Category:

பிராம்ப்டனில் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி!

#MIvDC

பிராம்ப்டனில் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி!

Published:Category:

மீட்பு முயற்சியில் கனேடிய அதிகாரிகள்: குளிரில் உறைந்து பலியானவர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு!

#MIvDC

மீட்பு முயற்சியில் கனேடிய அதிகாரிகள்: குளிரில் உறைந்து பலியானவர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு!

Published:Category:

கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பூனா ஓயாவில் சடலம் மீட்பு.

#MIvDC

கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பூனா ஓயாவில் சடலம் மீட்பு.

Published:Category:

இந்திய இழுவை படகுகளுக்கு எதிராக ஊர்காவற் துறை பிரதேச செயலகம் முன் போராட்டம்.

#MIvDC

இந்திய இழுவை படகுகளுக்கு எதிராக ஊர்காவற் துறை பிரதேச செயலகம் முன் போராட்டம்.

Published:Category:

ஆளுமையான அதிபரை நியமிக்குமாறு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

ஆளுமையான அதிபரை நியமிக்குமாறு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு.

#MIvDC

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு.

Published:Category:

கிளிநொச்சியை 13ஐ எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாகனம்.

#MIvDC

கிளிநொச்சியை 13ஐ எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாகனம்.

Published:Category:

நீரேந்தும் பிரதேசங்களில் காட்டுப்பகுதிகளுக்கு தொடர் தீ வைப்பு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.

#MIvDC

நீரேந்தும் பிரதேசங்களில் காட்டுப்பகுதிகளுக்கு தொடர் தீ வைப்பு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.

Published:Category:

இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னார் பிரதான பாலப் பகுதியில் இடம்பெற்ற சிரமதானம்.

#MIvDC

இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னார் பிரதான பாலப் பகுதியில் இடம்பெற்ற சிரமதானம்.

  • Thedipaar