Published:Category:

கனடா ஐயப்பன் ஆலய விடயத்தில் வெளிப்பட்ட தமிழின துரோகம் : தேசிய உணர்வாளர்களை வீதியிறங்கி போராட வைத்த சதி!

#MIvDC

கனடா ஐயப்பன் ஆலய விடயத்தில் வெளிப்பட்ட தமிழின துரோகம் : தேசிய உணர்வாளர்களை வீதியிறங்கி போராட வைத்த சதி!

கனடா ஐயப்பன் ஆலயத்தில் உபயகாரர் ஒருவரால் சுவாமிக்கு சாத்துப்படியாக(அலங்காரம்)  வழங்கிய தமிழர்களின் தேசிய மலரான கார்த்திகைப் பூக்களையும், தமிழீழத் தேசியச் சின்னமாகிய புலி இலட்சனையை கரையாக வடிவமைக்கப்பட்ட  அங்கவஸ்திரத்தையும் முன்னறிவித்தல் இன்றி நிரகாரித்த சர்ச்சை தனிநபர் பிரச்சனையில் இருந்து தேசிய உணர்வாளர்களை வீதியிறங்கி போராடும் அளவிற்கு  கவனயீர்ப்பு போராட்டமாக மாற்றியுள்ளது.

கடந்த 25.12.2021 அன்று காலை பத்துமணியளவில் இப்போராட்டம் இளைய தலைமுறையால் முன்னெடுக்கப்பட்டது. அப்போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுடன் பல தமிழ்த்தேசிய உணர்வு மிக்க பொதுமக்களும், மற்றும் சில ஐயப்பபக்தர்களும் பங்கேற்றிருந்தனர். ஆலயத்திற்கு எதிரான போராட்டமாக அல்லாமல் முழுநிர்வாக சபையைக் குறைகூறாமலும் அகங்காரத்துடன் தமிழ் தேசியத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடும் நிர்வாக சபை உறுப்பினர்களுக்கு எதிரானதாகவும், அவர்களின் தமிழ்த் தேசிய விரோதப் போக்குக்கு எதிராகவும் அமைதியான முறையில் இளைஞர்கள் இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.

2019 ஆண்டு சிறீலங்கா தூதரலாயத்தினரை கோயில் கும்பாபிசேகத்திற்கு நிர்வாக சபையின் முடிவு எடுக்காமலே அழைப்பு விடுத்தமையும், அது தொடர்பான சர்ச்சைகளும் தொடர்பாக பேசமுற்பட்ட பல அங்கத்துவர்களின் அங்கத்துவத்தை நீக்கியமை முதல் கார்த்திகைப்பூ நிராகரிப்பு, ஈழத்தமிழர்களின் தேசிய அடையாளமாக தமிழீழ மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழீழத் தேசியக் கொடியில் உள்ள புலி இலட்சனையை கரையாக நெய்யப்பட்ட பட்டு அங்கவஸ்திரம்; நிராகரிக்கபட்டமையும் தமிழ்த் தேசிய உணர்வாளர்களை குறிப்பாக இளைய சமூகத்தை போராடுகின்ற நிலைக்கு அழைத்து வந்துவிட்டது.

அடக்குமுறைக்கெதிராகப் விடுதலைப்போராளிகள் போராட, அந்த சிறீலங்கா அரசின் அடக்குமுறைகளிற்கு மத்தியினிலே நாட்டினிலே உயிர் வாழமுடியாது தம்முயிர் காக்க புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் கனடியத் தமிழர்களின் பணத்திலும் தொண்டிலும் உருவான ஆலயத்தின் நிர்வாக சபையிலுள்ள சிலரின், இனப்படுகொலை அரசான சிறீலங்கா தூதரகத்துடனான கைகோர்ப்பு தமிழ்த் தேசியத்திற்கு எதிரான நடவடிக்கைகளாக மாறி அடாவடித்தனத்துடனும், அதிகாரத்துடனும் அடக்குமுறையை ஆலய அங்கத்தவர்கள் மேலும் கட்டவிழ்த்துவிட்டமைகள் ஆதாரபூர்வமாகத் தெரியவருகின்றன. தமிழர்களாகிய எமது ஆலயத்திலேயே தமிழர்கள் எம்மீது தமிழின விரோதப் போக்காளர் சிலரின் அடக்குமுறை அதிகாரம் இதன் விளைவே இந்தக் கவனயீர்ப்பு போராட்டமாக வடிவெடுத்தமைக்கு அத்திவாரம்.  

பேராட்டமானது ஐயப்பன் ஆலயத்தின் முன்னால் மிடில்பீல்ட வீதியின் மறுபக்கமுள்ள நடைபாதை ஓரமாக பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் விளைவிக்காமல் நடைபெற்றது. அப்பொழுது ஆலயத்தினுள் இருந்து வந்த இருவரில் ஒருவர் போராட்டம் ஆரம்பித்தபொழுது போராட்டக்காரர்களுடன் வாய்த்தகராறில் ஈடுபட்டு அடிக்கச்சென்று வன்முறையாக  தாக்கியபொழுதும் கூட, அவ்விளைஞர்கள் பொறுமையைக் கடைப்பிடித்து எதிர்வன்முறையில் ஈடுபடாமல் நகரகாவலர்களை அழைத்து முறையீடுசெய்தனர். நகரகாவலர்களை இளைஞர்கள் அழைத்தமை கண்டு தகராறில் ஈடுபட்ட நபர்கள் மெதுவாக ஆலயம் நோக்கிச் சென்றனர்.

அப்பொழுது தொலைபேசியில் உதவிக்கு வருவதாகச் சொன்னீர்கள் எங்கே சென்றுவிட்டீர்கள் என்று உரையாடியதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. தகராறில் ஈடுபடவந்தவர்கள் மாலை அணிந்த ஐயப்பசாமிகளாக காட்சியளித்தனர். அதன் பின்னர் போராட்டம் ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக தமது நியாயங்களை எடுத்துரைக்கும் துண்டுப் பிரசுரங்களை விநியோகத்தும் கவனயீர்ப்பை தமிழ் உணர்வாளர்கள் நடத்தினர்.

அப்பொழுது அங்கிருந்த ஊடகவியலாளர்களின் உதவியுடன் சில ஐயப்ப அடியவர்கள் போராட்டக்காரர்களின் நியாயமான கோரிக்கைகள் அடங்கிய எழுத்துப் பத்திரத்தை நிர்வாக சபையினரிடம் கொடுப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் நிர்வாகத்திலுள்ள ஒருசிலரின் புறக்கணிப்பால் கைகூடாமல் போனது. அதன் பின்னர் மதியம் 2 மணிவரை அமைதியாக போராட்டத்தை நடத்திய மக்கள் ஞாயிற்றுக்கிழமையும் போராட்டம் நடைபெறும் என்று கூறிக்க லைந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகிய போராட்டம் மதியம் 2 மணிவரை நடைபெற்றது. இதே தினத்தில் தேடிப்பார்.கொம் ஊடகவியலாளர் குமார் தில்லைநாதன் அவர்கள் தமிழர்களுக்கு இடையே தமிழர்கள் இவ்வாறு போராடுவது வேதனைக்குரியது. எவ்வாறாவது இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஒரு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனும் நல்நோக்குடன் தம்மால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டார்.

ஆலய நிர்வாகத்துடனும் தொடர்பு கொண்டிருந்தார். ஆனால் ஆலய நிர்வாக சபையில் இருந்து எதுவித பதிலையும் அவரால் அன்றே பெற்றுக்கொள்ள முடியாதிருப்பதாகவும் வந்ததும் அறிவிப்பதாக போராடிய மக்கள் மத்தியில் தகவல் வழங்கினார்.
திங்கள் கிழமை தேடிப்பார் குமார் அவர்கள் மீண்டும் தொடர்பு கொண்டு காந்தி என்றழைக்கப்படும் சௌந்திரநாயகம் மரியாம்பிள்ளை (நிர்வாக சபைச் செயலாளர்) இடம் பேசியபொழுது நிர்வாகம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தெரிவித்ததாக போராட்டக்காரர்களிடமும், சக ஊடகவியலாளர்களிடமும் தேடிப்பார் குமார் அவர்கள் அறியப்படுத்தியுள்ளார்.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு. ; கொலை என சந்தேகம்.

#MIvDC

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு. ; கொலை என சந்தேகம்.

Published:Category:

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

#MIvDC

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

Published:Category:

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

#MIvDC

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

Published:Category:

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

#MIvDC

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

Published:Category:

அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!

#MIvDC

அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!

Published:Category:

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

#MIvDC

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

Published:Category:

ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!

#MIvDC

ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!

Published:Category:

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

#MIvDC

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

Published:Category:

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

#MIvDC

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

Published:Category:

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

#MIvDC

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

  • Thedipaar