கனடாவில் தடுப்பூசி போடாதவர்களுக்கு மருத்துவ வரி!
கனடாவில் தடுப்பூசி போடாதவர்களுக்கு மருத்துவ வரி!
கனடாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களுக்கு மருத்துவரி விதிக்க அங்குள்ள கியூபெக் மாகாண அரசு முடிவு செய்துள்ளது. கனடாவில் அதிக மக்கள் தொகையை கொண்ட 2-வது மாகாணமான கியூபெக்கில் கொரோனா தொற்று பாதிப்பு அதிதீவிரமாக இருந்து வருகிறது. நாட்டிலேயே அதிக அளவில் கொரோனா உயிரிழப்புகள் இங்கு நிகழ்ந்துள்ளது.
இதுவரை கொரோனா தொற்றால் 12 ஆயிரத்து 28 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே உயிரிழப்புகளை தவிர்ப்பதற்கு அந்த மாகாண அரசு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் மாகாணத்தில் 85 சதவீதத்துக்கும் அதிகமானோர் குறைந்தபட்சம் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர்.
சுமார் 13 சதவீதம் பேர் மட்டுமே முதல் டோஸ் தடுப்பூசி கூட செலுத்திக்கொள்ளமால் உள்ளனர். அவர்களையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வைப்பதற்கு மாகாண அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கியூபெக் மாகாணத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு மருத்துவ வரி விதிக்க முடிவு செய்துள்ள மாகாண பிரதமர் பிராங்கோயிஸ் லெகால்ட் அறிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்களிடம் இதுகுறித்து அவர் கூறுகையில் “தடுப்பூசியின் முதல் டோஸ் பெறாதவர்கள் வரி செலுத்த வேண்டும். கட்டணம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. சில தியாகங்களைச் செய்து தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்களுக்கு இது நியாயமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். நாம் அவர்களுக்கு கடன்பட்டிருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன்” என கூறினார்.

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது
பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்
கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!
அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!
அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!
மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!
குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!
பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!
23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!
பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.