Published:Category:

இடர்களை கடந்து ரொறன்ரோவில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட தமிழ் மரபுத்திங்கள் 2022!

#MIvDC

இடர்களை கடந்து ரொறன்ரோவில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட தமிழ் மரபுத்திங்கள் 2022!

ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழ் மக்கள் வழமையான உற்சாகத்துடன் பொங்கலிட்டு தமிழர் திருநாளை கொண்டாடியுள்ளனர்.

பிரித்தானியா மற்றும் கனடாவில் இந்த மாதம் மரபுரிமை திங்கள் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நிலையில் பொங்கல் விழா சிறப்பு பெறுகின்றது.

குறிப்பாக லண்டன் பெருநகரப் பிராந்தியத்தின் ஆட்சி மன்றத்தால் இந்த முறை முதன் முறையாக தமிழர் மரபுரிமை திங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் பிரித்தானிய வாழ் தமிழ் சமூகம் உற்சாகத்துடன் இந்த நாளை பெருமைப்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாகவே தமிழ் மொழியின் பழமை, இலக்கிய செழுமை ஆகியவற்றையும், கனடா சமுதாயத்திற்கு தமிழர்கள் ஆற்றிய பணிகளையும் அங்கீகரிக்கும் விதமாக, ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக, கனடா அரசு அறிவித்துள்ளது.

ஜனவரி மாதத்தில், தமிழர் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்கமைய ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக, கனேடிய தமிழ் மக்கள் தேர்வு செய்துள்ளனர்.

இத்தகைய பெருமை மிகு பொங்கல் திருவிழா கனடாவில், ரொறன்ரோ மாநகரில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டுள்ளது. "தமிழ் மரபுத்திங்கள் 2022" என்ற தலைப்பின் கீழ்  DHL Express நிறுவனத்தார் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, இப்பெருவிழாவில், இவற்றில் தமிழ் சமூக பிரதிநிதிகள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இம்முயற்சியானது தைப் பொங்கல் விழாவினை சிறப்பாக முன்னெடுத்து பல தமிழ் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவித்தது.

DHL Express ஆலை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், தேடிப்பார் ஊடகமும் பங்குபெற்று சிறப்பித்துள்ளது. தற்போதைய கொடிய வைரசு தொற்றின் காரணமாக மக்கள் பொது வெளியில் கூட இயலாத நிலை அதிகரித்துள்ளதால், புதிய கட்டுப்பாட்டு நடைமுறைகளுக்கு அமைய விதிமுறைகளை மதித்து, வெகு நேர்த்தியாக நடந்து கொண்டனர். உறுப்பினர்கள் தமிழ் பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் சால்வை அணிந்து சிறப்பித்தனர். பெருந்தொற்று காலத்திலும், தமிழ் உணர்வுக்கு மதிப்பளித்து கடும் சிரத்தை எடுத்து, வெற்றிகண்ட இந்நிகழ்வு கனேடிய தமிழர்கள் மத்தியில் பாராட்டுதலை பெற்றுள்ளது.https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

#MIvDC

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

Published:Category:

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

#MIvDC

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

Published:Category:

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

#MIvDC

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

Published:Category:

அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!

#MIvDC

அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!

Published:Category:

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

#MIvDC

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

Published:Category:

ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!

#MIvDC

ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!

Published:Category:

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

#MIvDC

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

Published:Category:

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

#MIvDC

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

Published:Category:

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

#MIvDC

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

Published:Category:

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.

#MIvDC

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.

  • Thedipaar