கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு.
கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு.
மாட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலையில் 1987ஆம் ஆண்டு இறால் பண்ணையில் பணி புரிந்தவர்களையும் அகதியாக இடம் பெயர்ந்து அடைக்கலம் புகுந்திருந்த அப்பாவி பொதுமக்கள் உட்பட 150 க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.
படுகொலை நடந்த இடத்தில் கொல்லப்பட்ட மக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியை 2006 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் இடித்தழித்திருந்தது.
இதனால் இறந்தவர்களின் உறவுகளும் பொது மக்களும் இறந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி க்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
இடித்தழிக்கப்பட்ட தூபியினை ரெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோ.கருணாகரம் (ஜனா) அவர்கள் தனது சொந்த நிதியில் மீளவும் புனரமைப்பு செய்து இருந்த நிலையில் கடந்த சில வருடங்களாக பலர் வருடா வருடம் மீண்டும் அஞ்சலி செலுத்தி வந்தனர்.
இந்த நிலையில் இப்போதைய அரசு இறந்த உறவுகளை அஞ்சலிங்கும் உரிமையையும் மக்களின் உணர்வுகளையும் மறுத்து பல முட்டுக்கட்டைகளை போட்டு இடையூறுகள் விளைவித்து வரும் நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (28) பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களின் கெடுபிடிகள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ரெலோவின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) தலைமையில் ரெலோவின் உப தலைவர் நி.இந்திரகுமார் (பிரசன்னா) ரெலோவின் நிதிச் செயலாளர் ந.விந்தன் கனகரட்ணம் ஆகியோர் மரணித்த மக்களை நினைவு கூர்ந்து தூபியில் சுடர் ஏற்றி,மலர் தூவி அஞ்சலி செலுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது
பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்
கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!
அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!
அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!
மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!
குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!
பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!
23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!
பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.