இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.
இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.
தூத்துக்குடி துறைமுகம் வழியாக இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி நிவாரண பொருட்கள் பேக் செய்யப்பட்டு அனுப்பும் பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு தமிழக அரசு நிவாரண பொருட்களை ஏற்கனவே சென்னையில் இருந்து அனுப்பியது.
அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தின் புதுக்கோட்டை, நெல்லை, திருச்சி, திருவண்ணாமலை சிவகங்கை, மதுரை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள 70 அரிசி ஆலைகள் மூலம் தூத்துக்குடி குடோனுக்கு வரவழைக்கப்பட்டு பேக்கிங் செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகம் வழியாக நிவாரண பொருட்கள் அனுப்பும் நடவடிக்கையை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தூத்துக்குடி துறைமுகம் அருகில் உள்ள குடோன்களில் ஆய்வு செய்தார்.
இதில் சென்னையில் இருந்து அனுப்பப்பட்ட 7 ஆயிரத்து 500 டன் அரிசியுடன் சேர்த்து தூத்துக்குடியிலிருந்து 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி என மொத்தம் 80 கோடி ரூபாய் மதிப்பிலான அரிசிகள், 28 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து பொருட்கள், 15 கோடி ரூபாய் மதிப்பிலான 500 மெட்ரிக் டன் பால் பவுடர் ஆகிய பொருட்கள் தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
தூத்துக்குடி துறைமுகம் வழியாக இந்த பொருட்கள் அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த பொருட்கள் துறைமுகம் வழியாக விரைவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார்.

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.
அட்டனில் எரிபொருள் வழங்கப்படாமையால் அமைதியின்மை.

அட்டனில் எரிபொருள் வழங்கப்படாமையால் அமைதியின்மை.
மன்னாரில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கி வைப்பு.

மன்னாரில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கி வைப்பு.
வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர் மீது தாக்குதல் முயற்சி.

வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர் மீது தாக்குதல் முயற்சி.
உலகின் மிகப்பெரிய சாக்லேட் தொழிற்சாலை மூலம் பக்டீரியா பரவல்.

உலகின் மிகப்பெரிய சாக்லேட் தொழிற்சாலை மூலம் பக்டீரியா பரவல்.
மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் 150 வீடுகள் காலி.

மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் 150 வீடுகள் காலி.
ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி.

ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி.
3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய மூவர் கைது.

3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய மூவர் கைது.
அவுஸ்திரேலியாவில் "கோ கோட்டா கோ" வர்த்தக நிலையம் திறந்து வைப்பு.

அவுஸ்திரேலியாவில் "கோ கோட்டா கோ" வர்த்தக நிலையம் திறந்து வைப்பு.
நாசர் சினிமாவில் இருந்து விலகல்.

நாசர் சினிமாவில் இருந்து விலகல்.